இளமையாக உடல் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்…! சரவாங்கி கஷாயம் உடல் எடை குறைய வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர்கள் உண்டா? இளமையாக உடல் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். மூட்டு வலியில் மோசமான மூட்டு வலி சரவாங்கி எனப்படுவது. உடலில் இருக்கும் வாத நீர் அதிகரித்து மூட்டுக்களில் தேங்கி வலி வருவது சரவாங்கி. இதற்கான சரவாங்கி கஷாயம் எப்படி செய்வது என்று பார்ப்போம். சரவாங்கி கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்: சுக்கு சூரணம் 2 கிராம், மிளகு சூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம் 2 கிராம், சுத்தி செய்த கொடிவேலி சூரணம் 2 கிராம், கோரைக்கிழங்கு சூரணம் 2 கிராம், திரிபலா சூரணம் 2 கிராம், வாயுவிடங்கம் சூரணம் 2 கிராம். செய்முறை: மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும். பெயரிலேயே தெரிகிறது பாருங்கள்…. சரவாங்கி கஷாயம் என்கிற பெயரிலேயே தெரியும், மூட்டு வலி ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் என்று சொல்லும் சரவாங்கியை குணமாக்கும் கஷாயம் என்பது. பொதுவாக முடக்கு வாதம் பிரச்சனை சில நேரங்களில் வலி குறையும், சில நேரங்களில் வலி அதிகமாகும், மருந்துகளின் துணையோடு கட்டுக்குள் இருக்கும். சில நேரங்களில் மருந்து எடுத்துக்கொண்டாலும் வலி இருக்கும். மருந்துகள் ஒருபக்கம் என்று இருந்தாலும், சரவாங்கி கஷாயத்தை ஒரு தேநீர் போல பருகி வந்தால் நல்ல குணம் தெரியும்.மூட்டுக்களின் இயக்கம் மாறி வருவதை பார்க்கலாம். தொப்பை வரக்கூடாதுன்னு நினைக்கிடறீங்களா? உடல் எடை குறைக்கும் ஆசை, தொப்பை வரக்கூடாது, தொடை பெரிதாக இருக்க கூடாது, பிட்டப்பகுதி பெரிதாக இருக்க கூடாது, ஸ்ட்ரக்சர் நல்ல அமைப்புடன் இருக்க வேண்டும் என்று என்ன முயற்சி எடுத்தாலும் பலனில்லை, மருத்துவ சிகிச்சை எடுத்தும் உடல் எடை குறையவில்லை என்று சொல்வார்கள். இவர்களுக்கான மருந்து இந்த சரவாங்கி கஷாயம்தான்.உடல் அமைப்பு, கொழுப்பு அமைப்பிலும் நல்ல மாற்றம் ஏற்படும் பிஸிக்கல் ஸ்ட்ரக்சர் மாறுபடும். கபம் பிரச்சனைகள் குறைந்து பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்..