Connect with us

TAMIL

TAMIL

100 நாட்கள் சாப்பிட்டால் மூட்டுவலியும் போகும்!

நிறைய வலிகள்…

நிறைய வலிகள்.

கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டுக்களில் வலி, முடக்குவாத வலி என்று தினமும் ஒரு வலியை அனுபவிக்கிறோம். முடக்கு வாதம் ஒரு சவால் என்றுதான் சொல்ல  வேண்டும். இப்படிப்பட்ட வலி, வீக்கம் குறைய, மற்ற மூட்டுக்களில் வலி  பரவாமல் இருக்க மாத்திரை என்று எடுத்துக்கொள்கிறோம். இப்படியே பார்த்தால் நிறைய மாத்திரைகள் சாப்பிட வேண்டியதாகி விடுகிறது.  வலி, வீக்கத்தை கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைக்க முடக்கு வாத கஷாயம்.பற்றி இப்போது பார்க்கலாம். இது மூட்டு வலி இருந்தாலும் 100 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குறைந்துக்கொண்டே வந்து குணமாகி விடும்.

முடக்கு வாத கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

கொடிவேலி சூரணம் 2 கிராம்,  புங்கன் வேர் சூரணம் 2 கிராம், ஆயில்மரப்பட்டை சூரணம் 2 கிராம், கடுக்காய் சூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம் 2கிராம், கடுகு சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

பக்கவாதம் சரியாக…

வலியால்  வேதனையோடு கஷ்டப்படுபவர்கள், வேறு மருந்துகளை சாப்பிட்டு வருவோர் என்று யாராயினும் இதை எடுத்துக்கொள்ளும்போது நல்ல மாற்றம் இருக்கும். பக்கவாத நோய் குணமாக வேண்டும் என்று நினைத்தால் இந்த கஷாயத்தை பயன்படுத்தி பாருங்கள்.

முடக்கு வாதம் மோசமான நோய்!

மூட்டுக்களில் கடுமையான வலி, உடலில் ஏற்படும் வலிகளை  நீக்கும் மருந்து. முடக்குவாதம் மோசமான நோய் மற்ற மூட்டுக்களுக்கும் பரவ ஆரம்பித்து உடலின் இயக்கம் குறைய ஆரம்பித்து உருவ அமைப்பே மாறிவிடும். பிறந்ததில் இருந்தே ஏற்படும் முடக்கு வாத நோய் காய்ச்சலுக்கு பிறகு உண்டான முடக்கு வாத நோய், இப்படி ஐந்து ஆறு வகைகளாக  முடக்கு வாதம் வருகிறது. காலை நேரங்களில் கால்களின் இயக்கம் நின்று விடும். பின்னர் எந்த சிரமமும் இல்லாமல் இருக்கும்.10 அல்லது 11 மணி ஆகும்போது மீண்டும் படுத்துவிட்டால் எழும்போது  மீண்டும் இது போல் வலி  உண்டாகலாம். தும்மல் ஏற்பட்டால் கூட கரண்ட் ஷாக் அடித்தார் போன்று உடல்  முழுவதும் வலிக்கும். இதை நீக்கும் அருமருந்து.இந்த கஷாயம்.

மூளையில் ரத்த கட்டி…

பக்க வாத நோய் மூளையில் ரத்த கட்டி விபத்து, முதுகுத் தண்டு காயம் என்று மூன்று வகை பக்க வாத  நோயிலிருந்து முழுமையாக விடுபடுவது கஷ்டம். பிசியோதெரபி செய்தும்  இயக்கம் பேச்சு கூட வர மாட்டேங்குது. பக்கவாதத்தை குணப்படுத்த முடியுமா, என்று கேட்பார்கள்.  பக்க விளைவுகள் உடலின் இயக்கம்., உள்ளுறுப்பு இயக்கம் குறைந்து போவது கண் மூக்கு, வாய், தோல் உணர்ச்சி குறைந்து வருவது, சுற்றி  நடக்கும் விஷயம் புரிந்தாலும் பதில் சொல்ல  முடியாது. பெரும்பாலும் இதற்கான இடத்தில் கொடுக்கும் மருந்துகளில்  இந்த முடக்குவாத கஷாயம் கட்டாயம் சேர்ந்து இருக்கும். காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை கூட சாப்பிடலாம்.  கைகள் மரக்கட்டை போல இருக்கிறது.. கால்களில் உணர்ச்சியற்ற தன்மை இருக்கிறது. மலம் சிறுநீர் கழிக்கும்போது உணர்ச்சியற்ற தன்மை இது எல்லாவற்றிலும் இந்த கஷாயத்தை பார்க்கும்போது மாற்றத்தை காண முடிந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.  

மூலத்துக்கும் இந்த கஷாயம் சாப்பிடுங்க…!

தசைகள் சம்பந்தப்பட்ட, மலப்பை சம்பந்தப்பட்ட இன்னொரு பிரச்சனை மூல நோய். இது  மூன்று விதம் இருக்கிறது. முதலில் ஆசனவாயில்  அடைப்பு, வலி வேதனை, அடுத்து மலம் கழிக்கும்போது தசை வெளியில் வருவது. பின்னர் மீண்டும் உள்ளே சென்று விடுவது, வலி வேதனை எரிச்சல் முள் குத்துவது போல இருக்கும். மூன்றாம் நிலை ஆசனவாய்க்கு வெளியில் தசை தொங்கிக்கொண்டே இருக்கும் உள்ளே போகாது. சில நேரங்களில் அடைத்து  6 முறை 10 முறை கூட மலம் கழிக்க வேண்டிய சூழல் இதற்கும் உதவி செய்யும் அருமருந்து.இந்த் முடக்கு வாத கஷாயம்.தகுந்த மருத்துவ ஆலோசனை பேரில் சாப்பிடவும்.

Newsletter Signup

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health Remedy For Gout (Arthritis)

Joint & Spinal Pain

Change Your Lifestyle to Beat Diabetes

Diabetes

The Ayurvedic remedy for Gastric Problems

Gastric Problems

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

TAMIL

Newsletter Signup

Copyright © 2021

Connect
Newsletter Signup

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp