TAMIL

வேர் முதல் நுனி வரை மருத்துவ குணம் கொண்ட அதிசய மரம்!

அந்த காலத்தில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சைக்கு மூங்கில் கத்தி!

அந்த காலத்தில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சைக்கு மூங்கில் கத்தி!

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவத்தில் மூங்கில் மருத்துவ பயன்பாடு  பற்றிய குறிப்பு  இருக்கிறது.

கேட்ராக்ட்  கண் அறுவை சிகிச்சைக்கு அந்த காலத்தில் மூங்கிலில் இருந்துதான் கத்தி போல எடுக்கப்பட்டது என்றும் ஆதாரம் இருக்கிறது.

மூங்கில் உப்பு….

உடலை உரமாக்கும் சாறு, மூங்கில் குருத்து, மூங்கில் உப்பு, மூங்கில் சர்க்கரை என்று அனைத்தும் மருத்துவத்துக்கு பயனாக இருக்கிறது. மூங்கில்  குருத்தை கீரை போன்று உணவாக வட கிழக்கு மாநிலங்களில்  சாப்பிடும் வழக்கம் இன்றும் இருக்கிறது.   சீனா, மலேசியா, இந்தோனேஷியாவில் மூங்கில் குருத்து  டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுப் பொருளாக இருக்கிறது.  டப்பாக்களில் அடைத்து மூங்கில் குருத்துக்கள் விற்கப்படுகிறது.

சீன மருத்துவம்…

ஆயுர்வேத மருத்துவம் போல பழமையான மருத்துவம் சீன மருத்துவம்தான். சீன மருத்துவத்தில் மூங்கில் குழந்தையினமை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மூங்கில் குருத்தை கொட்டைப்பாக்கு அளவு எடுத்து மாதவிலக்கு ஆன 5 வது நாளில் ஆரம்பித்து 20 வது நாள் வரை கொடுத்து வருகிறார்கள். பின்பு இயற்கை முறையில் அந்த பெண் கருத்தரிப்பதாக சீனா மருத்துவம் தெரிவிக்கிறது. மூங்கில் குருத்து கருமுட்டையின் வீரியம், கரு முட்டையின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதாகவும் தெரிவிக்கிறது. மூங்கில் உப்பை எடுத்து வெந்நீரில் கலந்து கொடுத்து வந்தால் எந்தத் காரணத்தினால் உதிரப்போக்கு இருந்தாலும் உடனடியாக நின்று போகும்.  சிறுநீரக மண்டலம், இனப்பெருக்க மண்டலம் நன்கு செயல்பட மூங்கில் உப்பை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.என்னதான் மருந்து என்றாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மூங்கிலை மருந்தாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது. 

Click to comment

Copyright © 2021