TAMIL

வறட்டு இருமலைப் போக்கும் நீலாம்பரி பூ..

டிசம்பர் பூ கனகாம்பரம் பூ வகையை சேர்ந்த தாவரம் நீலாம்பரி தாவரம்.

டிசம்பர் பூ கனகாம்பரம் பூ வகையை சேர்ந்த தாவரம் நீலாம்பரி தாவரம்.

இது ஒரு புதர்ச் செடி தாவர  வகையைச் சார்ந்தது. பொதுவாக கிராமங்களில் இயற்கை உணவு செய்தே உடம்பின் கோளாறுகளுக்கு மேனேஜ் செய்து வருவார்கள். அந்த வகையில் இந்த நீலாம்பரி செடியையும் அவர்கள் பயன்படுத்தி வருவதை பார்க்கலாம். தமிழ்நாடு தவிர ஒரு எங்கு சென்றாலும் இந்த நீலாம்பரி தாவரங்கள் இருப்பதில்லை.  

இருமும்போது சிறுநீர் கழிக்கிறதா?

வருடம் முழுவதும் முளைத்து இருக்கக் கூடிய நீலாம்பரியின் இலைச் சாறை 30 மிலி வரை பெரியவர்கள் மருந்தாக பயன்படுத்தலாம்.  அல்லது இலையை அரைத்த விழுது ஒரு கொட்டைப்பாக்கு அளவு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு சாறு சிறிய அளவில் கொடுக்கலாம். வறட்டு இருமல், இருமும் போது சிறுநீர் வெளியேறுவது எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வு இந்த நீலாம்பரி இலைச்சாறு.   வறட்டு இருமல் ஈரல் பாதிப்பு தேவையற்ற கொழுப்பு தேவையான கொழுப்பு விகித மாற்றங்கள் இவற்றுக்கு அருமருந்து என்று நீலாம்பரியை சொல்லலாம். இப்படிப்பட்ட நோய்க்கு நீலாம்பரியை மருந்தாக சாப்பிட்டு வரும்போது அது உடலையும் தேற்றி நன்கு பலப்படுத்துவதையும் பார்க்கலாம்.

உட்கார்ந்தா உறங்குகிறீர்கள்?

இரவு நேரங்களில் சிலர் படுத்து தூங்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே தூங்குவர்கள், இவர்களுக்கு  வறட்டு இருமலோ அல்லது உயர் ரத்த அழுத்தமோ, அல்லது இதய நோயோ கூட பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் நீலாம்பரி இலை  சாறை அருந்தி வந்தால் நன்கு படுத்து உறங்கலாம். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை கற்கள் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏன் இது இருப்பதில்லை என்று கேட்பார்கள். அவர்கள் பூண்டு, பட்டை, லவங்கம் என்று மசாலா சேர்ந்த உணவுகளை சாப்பிடுவதால் கொழுப்பு கழிவுகளில் வெளியேறி  விடும். ஆனால் ,சைவ உணவு  சாப்பிடுபவர்கள் இது போன்ற மசாலா பயன்படுத்தாததினால்  இவர்கள் சாப்பிடும் பால்  தயிர் போன்ற பொருட்கள் பித்தப்பையில் கற்கள் உண்டாக காரணமாகி விடுகிறது. இப்படிப்பட்டவர்கள் நீலாம்பரி இலைச்சாறு எடுத்து காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று சாப்பிட்டு வர வேண்டும். 3 முதல் 6 மாதங்களில் படிப்படியாக பித்தப்பை கற்கள் கரைந்து முழுமையாக குணம் தெரியும்.பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உடல் எடை கூடிவிடும். இந்த பிரச்னையை சரி செய்ய நீலாம்பரி விழுது அல்லது சாறு எடுத்து பருகலாம். 

Click to comment

Copyright © 2021