TAMIL

மூன்று உறுப்புகள் பிரச்சனைக்குத் தீர்வு தரும் குதிரை குளம்பு கொடி

சில வகை செடிகள், பூக்கள், காய்கள் விதைகள், இலைகள் நமது உறுப்புக்களின் உருவத்தை ஒத்து இருக்கும்போது அவை.

சில வகை செடிகள், பூக்கள், காய்கள் விதைகள், இலைகள் நமது உறுப்புக்களின் உருவத்தை ஒத்து இருக்கும்போது அவை.

அந்த உறுப்புகளின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் அப்படி ஒரு இலைதான் குதிரை குளம்பு கொடி மூலிகை

மேலிருந்து கீழ்நோக்கிப் பார்த்தால்  நுரையீரல் அமைப்பு போல…

மேலிருந்து கீழ்நோக்கிப் பார்த்தால்  நுரையீரல் அமைப்பு போல இருக்கும். கீழிருந்து மேல் நோக்கி இன்னொரு பக்கம் பார்த்தால் ஆண்களுடைய விதைப்பை போன்று இருக்கும். அப்படியே இந்த இலையைப் பார்த்தால் இரண்டு  சிறுநீரகம் ஒட்டி வைத்தது போன்று இருக்கும்.மேற்கண்ட உறுப்புக்களின் பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய அருமருந்து என்று இந்த குதிரைக் குளம்பு செடியை சொல்லலாம்.இதை உள்ளுக்கு மருந்தாக சாப்பிடும் போது சாறு எடுத்து 30 மிலி அளவு காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று சாப்பிட்டு வரலாம். இல்லாமல் இதை அரைத்து எடுத்து அந்த விழுதை கொட்டைப்பாக்கு அளவு காலையும் இரவும் சாப்பிட்டு வரலாம். 14 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க கூடாது. தேன் கலந்து சாப்பிடலாம்.. சர்க்கரை நோயாளிகள் தேன் கலக்க கூடாது நுரையீரல் மண்டல நோய்கள், சிறுநீரக மண்டல நோய்கள் சரியாகும்.

டயாலிசிஸ் மட்டும் தீர்வல்ல….

சிறுநீரக பிரச்சனைகள்; என்று சொல்லக்கூடிய சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக குழாய் சுருக்கம், சிறுநீரகத்தில் புரதச்சத்து வெளியேறுவது, கோடைகாலம்  வந்து விட்டாலே சிறுநீரக கற்கள் வந்து அறுவை சிகிச்சை செய்துதான் கற்களை அகற்ற வேண்டும் என்கிற நிசாலையில் இருப்பவர்கள், சிறுநீரக செயல் குறைபாட்டால் டயாலிசிஸ் செய்வதுதான் தீர்வு என்று இருப்பவர்கள் அனைவருக்கும் அருமருந்து இந்த குதிரை குளம்பு செடி. பெண்கள் நீர்ச்சுருக்கு என்று அவதிப்பட்டு வருவார்கள் அவர்களுக்கும் இது அருமருந்து. சாறு எடுத்து குடிக்கலாம். அல்லது கொட்டைப்பாக்கு அளவு விழுது அரைத்து சாப்பிட்டு வரலாம்.

நுரையீரல் பாதிப்பு சிறுநீரகத்தையும் பாதிக்கும்…

நுரையீரல் பாதிப்பு இருந்தால் சிறுநீரகம் பழுதடையும் நிலை ஏற்படும். ஆனால், இது வெளியில் அவ்வளவு சீக்கிரம் தெரியாது. ஒரு சைலன்ட் கில்லர் போன்று நுரையீரல் பாதிப்பால் சிறுநீரகம் பழுதடைந்து இருக்கும். இல்லாமல் ஆஸ்த்துமா அலர்ஜி என்கிற நிலையிலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அப்போது ஒருவேளை சிறுநீரக பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் ஒரு சிறந்த தீர்வாக குதிரை குளம்பு கொடி  சாறு, அல்லது விழுது சாப்பிட்டு வந்தால் இருக்கும். தகுந்த மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதை எடுத்துக்கொள்வது தவறு.

Click to comment

Copyright © 2021