Joint & Spinal Pain

மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களுக்கு ஒரே தீர்வு மூட்டுவீக்க வலி கசாயம்

யூரிக் ஆசிட் மூட்டுக்களில் தங்கிவிட்டால் என்னவாகும்?

யூரிக் ஆசிட் மூட்டுக்களில் தங்கிவிட்டால் என்னவாகும்?

மூட்டு வீக்க வலி கஷாயம்:

வலி, வேதனை இரண்டும் வீக்கத்தோடு வருவது எனும்போது மிகுந்த பிரச்னைக்கு ஆளாக நேரிடும். அதாவது காலையில் எழும்போதே  சிறு சிறு மூட்டுக்களில் வலி, மூட்டுக்களை  சுற்றியுள்ள தசை இயங்க முடியாத அளவுக்கு  பாதிப்பு. இதற்கு கவுட் ஆர்த்ரைடிஸ் என்று பெயர். அதாவது உடலை விட்டு வெளியேற வேண்டிய யூரிக் ஆசிட் மூட்டுக்களில் தங்கி விடும்போது மூட்டு வீக்கம் ஏற்பட்டு வலி வேதனை உண்டாகிறது. இதைத் தீர்க்கும் மூட்டு வீக்க வலி கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

மூட்டு வீக்க வலி கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

சடா மாஞ்சில் சூரணம் 2 கிராம், கோஷ்டம் சூரணம் 2 கிராம்,   சந்தனம் சூரணம் 2 கிராம்,  அமுக்கிரா சூரணம் 2 கிராம்,  சித்தரத்தை சூரணம் 2 கிராம்,  சுத்தி செய்யப்பட குங்கிலியம் சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உ நாவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

தொடர்ந்து 7 நாட்கள்…

மூட்டுக்களின் வீக்கமும் வலியும், வலி  மாத்திரை சாப்பிட்டால்தான் குணமாகும் என்று நினைப்பார்கள்.. அவர்கள் மூட்டு வீக்க வலி கஷாயத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து வீக்கமும் குறைந்து போயிருக்கும்.  வெறும் மூட்டு வலிகளுக்கு மட்டும் இல்லை வீக்கத்தோடு கூடிய மூட்டு வலிக்கும் சிறந்த நிவாரணி மூட்டு வீக்க வலி கஷாயம்.  

கவுட் ஆர்த்தரைடீஸ்…

கவுட் ஆர்த்ரைடிஸ் நோயால் மேலை நாடுகளில் 100 ல் குறைந்தது 10 பேராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக சிறு நீர் வழியாக யூரிக் ஆசிட் வெளியே போகாமல் மூட்டுக்களில் தேங்கி விடும்போது மூட்டு வீக்கமும் வலியும் வந்துவிடுகிறது. மூட்டுக்களை முறித்தால் சட சட  என்று சத்தம் வரும். இது யூரிக் ஆசிட் மூட்டுக்களில் இருப்பதால்தான் . இதுவே அதிகமாக யூரிக் ஆசிட் மூட்டுக்களில் தேங்கி விடும்போது மூட்டு வீக்கம் வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு கவுட் ஆர்த்ரைடிஸ் என்று பெயர். கவுட் ஆர்த்ரைடிஸ் ஆரம்பத்தில் சிறு சிறு மூட்டுக்களில் வலி ஆரம்பிக்கும்., காலின்  பெரு விரலில்தான் ஆரம்பிக்கும். அடுத்து கைகள் மூட்டு, மணிக்கட்டுகள், மூட்டு வீக்கம் என்று வந்து காய்ச்சல் கூட வரும். இரண்டு நாள் மூன்று நாள் உடலை அசைக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை இருக்கும். 6 மாசத்துக்கு யூரிக் ஆசிட் தேங்க ஆரம்பித்து கவுட் ஆர்த்ரைடிஸ் தீவிரம் அதிகமாகும்போது அடிக்கடி வீக்கம் வலி ஏற்படும். இதற்கு  ஆயுர்வேத மருத்துவ முறை நூலில்   வாத  ரத்தம் தலைப்பின் கீழ் வைத்தியம் சொல்லப்பட்டும்  இருக்கிறது. மூட்டு வீக்க வலி கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் இந்த நோய்க்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

Click to comment

Copyright © 2021