TAMIL

மன அழுத்தம்…. மாதவிடாய் கால வலியை போக்கும் உளுந்து….!

கலாச்சாரத்தோடு ஒன்றிய உளுந்து!

கலாச்சாரத்தோடு ஒன்றிய உளுந்து!

உளுந்து செடியின் இலை, விதை, வேர் அனைத்துமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.  கருப்பு உளுந்து வெள்ளை உளுந்து என்று தனித்தனியாக உணவுக்காக பயன்படுத்துகிறோம். எத்தனை வகை பருப்புக்கள் இருந்தாலும் உளுந்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு பொருளாகவும் இருக்கிறதது. உளுந்தில் மட்டும் 14 வகையான புரத்தச் சத்து அமிலங்கள் உள்ளன. உளுந்து கஞ்சியாக செய்தும், அல்லது கழியாக செய்தும் சாப்பிடுவது அந்த கால உணவு முறையாக இருந்தது.

 கருப்பையை பலப்படுத்தும் உளுந்து!

உளுந்து உடலைத் தேற்றுவதற்காகவும்,  உடல் எடையை கூட்டுவதற்காகவும் பயன்படுகிறது. பெண் குழந்தைகள் பூப்பெய்தி விட்டால் இந்த உளுந்தை கழி அல்லது கஞ்சி செய்து தருவார்கள். இதில் இருக்கும் என்சைம்கள் கருப்பையை பலப்படுத்துகிறது என்பதால், பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் உளுந்தில் செய்யப்பட்ட பொருட்களை  முக்கிய உணவாகத் தருகிறார்கள். அதோடு பூப்பெய்தியவுடன் பெண்  குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களையும் மாதவிடாய் கால வலிகளையும் குறைக்கிறது  உளுந்தில் செய்யப்படும் உணவுகள்.   பூப்பெய்திய பெண்கள் அடுத்த மாதவிலக்கு ஏற்படும்வரை ஆரோக்கியமாக இருக்கவும், இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்ககளில் கருப்பையை பலப்படுத்தவும் உளுந்து கஞ்சியாகவோ, அல்லது கழியாகவோ செய்து தருகிற வழக்கம் நிறைய கிராமங்களில் இன்றைக்கும் இருக்கிறது.

இயற்கை முறையில் எலும்பு சத்து கிடைக்க….

மூட்டு பகுதி வலி, கழுத்து பகுதி வலி. எலும்பு தேய்மானம், இவற்றுக்கு எலும்பு சத்து கொடுக்கும் மாத்திரை மருந்து எடுத்துக்கொண்டாலும் பயன் அளிக்காது.இயற்கை முறையில் எலும்பு சத்தை பலப்படுத்திக்கொள்ள உளுந்து கஞ்சி அல்லது கழி சாப்பிட்டு வரலாம்.

திடீர் மூட்டுவலியா?

பெண்களுக்கு மெனோபாஸ் என்று சொல்லைக்கூடிய மாதவிலக்கு நின்று போன காலக்கட்டத்தில் திடீரென்று மூட்டுக்கள் வலிக்கும், கழுத்து நரம்பு வலிக்கும். இது எலும்பு பலவீனம். இப்படி மூட்டுக்கள் முதுகுத் தண்டு பிரச்சனை வராமல் இருக்கவும், உளுந்து கஞ்சி அல்லது உளுந்து கழி செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.உளுந்து மாவை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து களிம்பு போல செய்து மூட்டு வலிக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம். 

தோள்பட்டை வலிக்கு…

உளுந்த மாவை களிம்பு போல செய்து கையின் தோள்பட்டையில் தடவ, தோள்பட்டை வலி குணமாகும். வெளியூரில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்காமல் போகிறது. இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். திடீரென்று திருமணம் ஆகும்போது தாம்பத்திய வாழ்வில் முழுதாக ஈடுபட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உளுந்து கஞ்சி அல்லது கழி செய்து 48 நாட்கள் சாப்பிட கொடுக்கும்போது உடல் உரமாகி தாம்பத்திய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும். 

Click to comment

Copyright © 2021