Diabetes

பெரும் சவாலாக இருக்கும் ரத்த சோகை… கஷாயம் சாப்பிடுங்க!

கஷாயம் சாப்பிடுங்க!

கஷாயம் சாப்பிடுங்க!
சமூகத்தில் ரத்த சோகை பிரச்சனை ஒரு சவாலாகவே இருக்கிறது. ரத்த சோகை பிரச்சனை உலகின் முதல் பத்து நோய் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமருந்தாக இருக்கும். ரத்த சோகை கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
ரத்த சோகை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்
சுத்தி செய்த கொடிவேலி சூரணம் 2 கிராம், ஓமம் சூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம், 2 கிராம், மிளகு சூரணம் 2 கிராம், கடுக்காய் சூரணம் 2 கிராம், இந்துப்பு 2 கிராம்.
செய்முறை:
மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக வற்றியவுடன். இறக்கி வடிக்கட்டி, காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
சோர்வு..வேதனை…தூக்கமின்மை…
சோர்வு, வேதனை, தூக்கமின்மை என்று அவதிப்பட்டு, மருத்துவரிடம் காண்பித்தால் இரும்பு சத்து இல்லை என்று மாத்திரைகள் எழுதித் தருவார்கள். மாத்திரைகள் சாப்பிட்டாலும் பயன் இல்லை என்று பிரச்சனைகள் தீராமல் இருப்பார்கள். இதற்கு தீர்வு தருகிறது ரத்த சோகை கஷாயம். உடலுக்கு நல்லது செய்யக்கூடிய கஷாயம் இந்த ரத்த சோகை கஷாயம்.
ஐந்துவகை அறிகுறிகள்…
ஐந்துவகை ரத்த சோகை அறிகுறிகள் இருக்கின்றன. முதல் பெரிய பிரச்சனை என்றால் உடல் சோர்வு… காலையில் எழ முடியாது, எந்த வேலை செய்யவும் விருப்பம் இருக்காது. சரி என்று மீறி வேலை செய்தாலும், ஒரு 10 நிமிடத்தில் படுத்துக்கொள்ளலாமா என்று இருக்கும். இரண்டாவது உறுப்புக்களின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். நடந்தால் மூச்சு வாங்கும். உடலின் உறுப்புக்கள் வேலை செய்யாமல் உடலே உருகுவது போல இருக்கும். மூன்றாவது கால்கள், கைகள், முகத்தில் தேவையற்ற வீக்கம் இருக்கும். காலையில் எழும்போதே முகம் வீங்கி இருக்கும். மதிய நேரத்தில் படுத்தாலும் முகம் வீங்கி, கை, கால், நீர் சுரந்து வீக்கமாக இருக்கும்.நான்காவது, தோல் வறட்சி ரத்த சோகை பிரச்சனையால் தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறமாற்றம். ஐந்தாவது பெண்கள் என்றால் மாதவிலக்கு பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடி கொட்டும்…
தலைமுடி ஒரே மாதத்தில் 20 அல்லது 30 சதவிகிதம் கொட்டிவிடும். ஆண்களாக இருந்தால்முடி கொட்டி தலை வழுக்கையாக்கை விடும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக உதிரப்போக்கு ஆண்களுக்கு மூலம் பவுத்திரம் என்று உதிரப்போக்கு என்று இருக்கும் இவர்களுக்கு மட்டும் இல்லை. யாருக்கு வேணும்னாலும் ரத்த சோகை வரலாம். இது மட்டுமின்றி குழந்தையினமை, உடல் சோர்வு, சளி பிரச்சனை என்று இதற்கு காரணம் ரத்த சோகை. இரும்புசத்து குறைபாடு மாத்திரைகளால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த ரத்த சோகை கஷாயம்பருகி வந்தால் பசியின்மை, ஜீரணமின்மை, உடல் வீக்கம், ரத்த சோகை இல்லாமல் இருக்கலாம்.

Click to comment

Copyright © 2021