TAMIL

தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த

குளிர் ஜுரமா…நடுக்கும் ஜுரமா? இதோ தீர்வு தரும் திப்பிலி கஷாயம்!

குளிர் ஜுரமா…நடுக்கும் ஜுரமா? இதோ தீர்வு தரும் திப்பிலி கஷாயம்!

குளிர் ஜுரம், நடுக்கம் ஜுரம் என்று  பல ஜூர வகைகள் உண்டு.

அத்தனைக்கும் அருமருந்தாக இருக்கும் திப்பிலி கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

திப்பிலி கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

சுக்கு சூரணம் 3 கிராம்,  குருந்தொட்டி வேர் சூரணம் 3 கிராம்,  திப்பிலி சூரணம் 3  கிராம்.. 300 மிலி தண்ணீர்

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தன்னார்  விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, காலை இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

காய்ச்சல் வரும்… கூடவே பலவீனமும் வாட்டும்!

காய்ச்சல் வராமல் தடுக்கும், காய்ச்சல் வந்து போன பின்னர் வாட்டி வதைக்கும் உடல் பலவீனத்தையும்  திப்பிலி கஷாயம் போக்கும். டெங்கு, மலேரியா, குளிர் காய்ச்சல், நடுக்க காய்ச்சல், டைபாய்டு, என்று எந்த ஜுரம் வந்து போனாலும் உடல் சோர்ந்து மெலிந்து பலமிழந்து போகும். இதற்கு திப்பிலி கஷாயம் நல்ல உடல் தேற்றி என்று கூட சொல்லலாம். சிலர் தினமும் காய்ச்சல் என்று அவதிப்படுவார்கள். பலவித பரிசோதனை என்று செய்து பார்த்தாலும் ஜுரத்துக்கான காரணம் தெரியாது. இப்படிப்பட்ட ஜுரத்துக்கு அருமருந்தாக இருப்பது  திப்பிலி கஷாயம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்!

100 வருடத்துக்கு முன்பு ஆன்டி பயாடிக் மருந்துகள், காயத்தை  கட்டுப்படுத்தும் மருந்துகள் என்று இருந்ததில்லை. ஆனாலும் அவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருந்தது. காரணம் அவர்கள் இயற்கை முறை எதிர்ப்பு சக்தி உணவுகளை சாப்பிட்டு வந்ததுதான்.அப்போதைய,இறப்பு விகிதத்துக்கு, இப்போதைய இறப்பு விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய நிலைதான்   மோசமாக இருக்கும்.

அடிக்கடி ஜுரம் வருதா?

உடலில் தேவையற்ற கழிவுகள் இல்லாம;ல் காய்ச்சல் படிப்படியாக குறைந்து ஆரோக்கியம் மேம்பட திப்பிலி கஷாயம் மிகச்சிறந்த மருந்து. 65 லிருந்து  70 வயது கொண்டவர்கள் அடிக்கடி ஜுரம் என்று அவதிப்படுவார்கள். சிறுநீரத் தொற்றாக  இருக்குமோ என்று சோதனை செய்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி இல்லாதது என்பது உயிரையே அழிக்கும் நோயாக மாறிவிடும். . இந்த பிரச்சனைக்கும் அருமருந்து திப்பிலி கஷாயம். மூட்டு மாற்று சிகிச்சை, ஒவ்வாமைக்கு சிகிச்சை  என்று எடுத்து  உடலின் ஆரோக்கியம் கெட்டு போயிருக்கும். அதற்கு இப்படியான இயற்கை மருத்துவம்தான் தீர்வு..நரம்பு  மண்டல காய்ச்சல்…இதை  ஜன்னி என்று சொல்வார்கள். திடீர் காய்ச்சல், உடல்  கொதிக்கும், கைகால்  இழுக்க ஆரம்பிக்கும். ஓரிரு  நாட்களில் 15 கிலோ 20 கிலோ என்று எடை குறையும்.இப்படித் தீர்க்க முடியாத விஷக்காய்ச்சல், நரம்பு காய்ச்சல். ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்தும் சரியாகாது. அவர்களுக்கு இந்த திப்பிலி கஷாயம் சிறந்த மருந்து.

Click to comment

Copyright © 2021