Thyroid

தைராய்டுக்குத் தீர்வு தரும் கண்டமாலை கஷாயம் பற்றி பாருங்க…

தைராய்டுக்குத் தீர்வு தரும் கண்டமாலை கஷாயம் பற்றி பாருங்க…

தைராய்டுக்குத் தீர்வு தரும் கண்டமாலை கஷாயம் பற்றி பாருங்க…

முன் கழுத்து கழலை நோய் அதாவது தைராய்டு பிரச்சனை அயோடின் குறைபாடு காரணமாக வருகிறது.இது சமீப காலங்களில் மட்டும்தான் பிரச்சனையாக இருக்கிறது என்று நினைக்கிறோம். இல்லை, ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே மனித இனத்தை கண்டமாலை என்கிற பிரச்சனையின் மூலம் ஆட்டிப்படைத்து இருப்பதாக ஆயுர்வேத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றன. இதை குறைப்பதற்கான கண்டமாலை கஷாயம் எப்படி செய்வது என்று

பார்க்கலாம். காய்ட்டர் என்றும் சொல்லலாம்…

கண்டமாலை கஷாயம் கழுத்தில் தைராய்டு சுரப்பால் உண்டாகி இருக்கும் வீக்கத்தை படிப்படியாக குறைத்து உடலை குணமாக்கும். ஆயுர்வேதத்தில் காய்ட்டர் என்று சொல்லக்கூடிய வீக்க பிரச்சனையை குறைக்கும் கண்டமாலை கஷாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கண்டமாலை கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்

ஆடாதொடை சூரணம் 2 கிராம், சீந்தில் கொடிசூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம் 2 கிராம், வேப்பிலை சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, 100 மிலியாக குறைந்தவுடன் இறக்கி வடிகட்டி, காலை இரவு உணவுக்கு முன்பு பருகி வரவும்.

நிணநீர் சுரப்பிகள்…

உடலை வருத்த கூடிய நோய் தைராய்டு என்று சொன்னால், நிணநீர் சுரப்பிகள் வீங்கி இருக்கும். நோய் அக்குள் பகுதி கழுத்து பகுதி வீக்கம்… உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான உறுப்பு என்றால் அது நிணநீர் சுரப்பிகள். கண்டமாலை கஷாயத்தை பொறுத்தவரை காய்ட்டர் என்று சொல்லக்கூடிய முன் கழுத்து கழலை நோய் தைராய்டு சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவது. கண்டமாலை கஷாயம் இதற்கு மிகச்சிறந்த மருந்து. கண்டமாலை வளர்ந்து வீக்கமடைவதை சிறிது சிறிதாக கரைக்கும்.

சர்க்கரை நோய் உடல் சோர்வு…

சர்க்கரை நோயால் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஒரு இடத்தில் நின்று வேலை செய்ய முடியவில்லை. இதனால், 50 வயது ஆண்களும் பெண்களும் விஆர்எஸ் ஒய்வு எடுத்துகொல்வதைக் கூட பார்த்து இருக்கிறோம். இந்த சோர்வை தீர்க்கவும் கண்டமாலை கஷாயம் மிகச்சிறந்த மருந்து. உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு அருமருந்து. இதில் இருக்கும் கசப்புச்சுவை சர்க்கரை பாதிப்பு, சர்க்கரையினால் உண்டான பக்க விளைவை குறைத்து விடும்.

நல்ல மூலிகைத் தேநீர்,,,

உணவுக்குழல் மண்டலத்தில் புற்று நோய், வயிற்றில் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், வாய் புற்று நோய்கள் இவற்றுக்கும் கண்டமாலை கஷாயத்தை ஒரு மருந்தாக அல்ல மூலிகை தேநீராக எடுத்துக்கலாம். புற்று நோயின் வலி, வேதனையைக் குறைக்கும். புற்றுநோயின் தீவிரத்தையும் குறைக்கும். கண்டமாலை கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் முன்னேற்றம், மாற்றம் ஏற்படும். இதய அறுவை சிகிச்சை, ஈரல் அறுவை சிகிச்சை, சிறுநீரகம் அறுவை சிகிச்சை, கை, கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், சோர்வு என்று எந்த வேலையும் செய்ய முடியாமல் இருப்பார்கள். இவர்களுக்கு காலையில் எழ முடியாது. நிறைய ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்டும் உடல் சோர்வு இருக்கிறது என்பார்கள். இதற்கு தீர்வு இந்த கண்டமாலை கஷாயம். உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமருந்து.

Click to comment

Copyright © 2021