Hairfall

கூந்தல் கருப்பு…தலைமுடியை கறுப்பாக்கும் இயற்கை ஹேர்டை…!

இயற்கை நிறமூட்டி…

இயற்கை நிறமூட்டி…
இது ஒரு செடிவகைத் தாவரம், இயற்கை நிறமூட்டியாக பயன்படும் இந்த அவுரியிலையை பல நூறாண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அனுப்பி வருகிறார்கள்.
இயற்கை சாயத்துக்கு….
அவுரி இலை பருத்தி ஆடைகளில் இயற்கை சாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது தலைமுடியை கறுப்பாகும் வகையில் இயற்கை ஹேர் டையாக அவுரி இலையைப் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு மட்டும் அல்லாது, ஈரல் தொடர்புடைய பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இவைகளுக்கு அவுரி இலை உள்ளுக்கு சாப்பிடும் வழக்கம் உள்ளது.அவுரி இலையை எண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு எண்ணெயாக தடவி வரும் வழக்கமும் இருந்து வருகிறது.
குழந்தைகளுக்கு நோ…
அவுரி இலை சாறு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், வயிறு சம்பந்தப்பட்ட, ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அவுரி இலைச்சாறு 30 மிலியில் இருந்து 50 மிலி வரை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். கண்பார்வை கோளாறுகளுக்கும் அவுரி இலை மருந்தாக பயன்படுகிறது.
தலைமுடி பிரச்சனைக்குத் தீர்வு…
அவுரியை தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு நல்ல தீர்வாக பயன்படுத்தி வருகிறார்கள். இளநரையால் கவலைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் இந்த அவுரி இலையை எண்ணெயில் இட்டு காய்ச்சி தடவி வரும்போது இளநரை மறைந்து போகும். அதோடு கெமிக்கல் இல்லாத இயற்கை முறை தலைசாயமாகவும் இது பயன்படுகிறது.
உள்ளுறுப்புக்களுக்கு…
உள்ளுறுப்புக்களில் கல்லீரல், மண்ணீரல் இரண்டுக்குமே அவுரி பயன்படும்.உணவு சாப்பிட்டவுடன் வயிற்றின் இடது புறத்தில் கடுமையான வலி, உடனே வாந்தி என்று அவதிப்படுவார்கள். சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து அனீமியா போன்ற பிரச்சனைகள் உருவாகும். ரத்தம் ஏற்றினாலும் கூட அனிமியா பிரச்சனை சரியாகாது. இதற்கு அவுரி இலை உள்ளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.பசியின்மை, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் அவுரி நல்ல மருந்தாக பயன்படுகிறது. இதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது தவறு.

Click to comment

Copyright © 2021