WOMEN’S HEALTH

குடல் புழுக்கள் முதல் சுக பிரசவம் வரை இந்த ஒரு பழமே போதும்!

பித்தத்தை குறைக்கும் நார்த்தங்காய்!

பித்தத்தை குறைக்கும் நார்த்தங்காய்!

நார்த்தங்காய் எலுமிச்சை வகைத் தாவரத்தை  சேர்ந்தது.

ஆனால், இதில் முள் இருக்காது. விட்டமின் சி நிறைந்த புளிப்பு பழங்கள் பித்தத்தை தரக்கூடியது. ஆனால், நார்த்தங்காய் பித்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது. நார்த்தங்காய், இதன் மரம், இலை, என்று எல்லாமே மருந்துக்கு பயன்படும். வயிற்றுப புண்கள், உணவுக்குழாயில் பித்தத்தை நீக்குவது, செரிமான மண்டலத்தை பலப்படுத்துவது என்று நார்த்தங்காய் அருமருந்தாக இருக்கிறது. செரிமானத்தைத் தூண்டி உறுப்புக்களை பலப்படுத்தும்.  

 எழும்போதே ஒற்றைத் தலைவலியா?

காலையில் எழும்போதே ஒற்றைத் தலைவலியுடன் எழுவார்கள். மதியம் ஆக ஆக தலைவலி உச்சத்துக்கு செல்லும் வாந்தி குமட்டல் என்று பாடாய் படுத்திவிடும். இவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நார்த்தங்காய் ஒரு தேக்கரண்டி சாறு எடுத்து குடித்துவிட்டால் ஒற்றைத் தலைவலி பறந்து போகும். நார்த்தங்காய் கிடைக்காதவர்கள் நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் வாங்கி வந்து ஒரு இன்ச் அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து விட  வேண்டும்.

காய்ச்சலுக்குப் பின் உணவு பிடிக்கலையா?

டைபாய்டு, மலேரியா, டெங்கு என்று காய்ச்சல் வந்தவர்களுக்கு உணவு சாப்பிட பிடிக்காது. அவர்கள் நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு நாவில் வைத்து விட்டாலோ, அல்லது உப்பு ஊறுகாய் ஒரு பின்ச் சாப்பிட்டாலோ மத்திய நேரத்திக்குள் பசி எடுத்து சாப்பிட கொண்டா கொண்டா என்று வயிறு கேட்கும். ஈரல் செயல் குறைபாடு வயிற்றில் சில அறிகுறிகள் மூலம் தெரியவரும். அதாவது சாப்பிட்ட உணவு  செரிக்காமல் வயிறு பானை போல உப்பி கொள்வது, உணவு செரியாமை, புளித்த ஏப்பம் வருவது  போன்ற சில அறிகுறிகள் தெரியும். அவர்கள் நார்த்தங்காய் சாறு எடுத்து ஒரு மண்டலம் குடித்தால், ஈரல் பலப்படும்.

Click to comment

Copyright © 2021