TAMIL

எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறாது இந்த இலையை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயாளிகளுக்கும் ஸோ ஸ்வீட் இனிப்பு துளசி!

சர்க்கரை நோயாளிகளுக்கும் ஸோ ஸ்வீட் இனிப்பு துளசி!

இனிப்பு துளசி அல்லது சர்க்கரை துளசி எனப்படும் ஒரு இலையில் 10 பேருக்கு பாயசம் வைத்து கொடுக்கலாம். அவ்வளவு இனிப்பு ஒரு இலையில் இருக்கும்.

சர்க்கரை துளசியின் மூலக்கூறு  எவ்வளவு கலந்து சாப்பிட்டாலும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இன்றைக்கு வணிக ரீதியாக இனிப்புக்காக சர்க்கரை துளசியை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். கணையம் பாதிப்பு,பித்தப்பை கற்கள் பிரச்னைக்கு தீர்வு, கால் எரிச்சல், பாத வெடிப்பு, பசியின்மைக்கு சர்க்கரை துளசி அருமருந்தாக இருக்கிறது.

மஞ்சள் காமாலைக்கு…

சர்க்கரை துளசியின்  விழுது மஞ்சள் காமாலைக்கு முக்கிய மருந்தாக  வட  மாநிலங்களில் கொடுக்கப்படுகிறது. சர்க்கரை துளசியின் சாறு 30 மிலி அளவுக்கு எடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக 7 வது மாதத்தில் இருந்து பிரசவம் ஆகும்வரை அசாம் பழங்குடியின  மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

சர்க்கரை நோயின் பக்கவிளைவுகள்….

சர்க்கரை நோய் 20 வருடம் இருக்கிறது, 30 வருடம் இருக்கிறது…மருந்துகள் எடுத்துக்கொண்டும் கட்டுக்குள் இல்லை என்று சொல்லுவார்கள். சர்க்கரை நோயினால் உண்டாகும் பக்க விளைவுகளையும் தடுக்க முடிவதில்லை. தோள்கள் வலிக்கிறது, கண்கள் பாதிப்பு இப்படி பலவகை பக்க விளைவுகள் இருக்கும். அத்தனை பக்க விளைவுகளையும் சரி செய்கிறது சர்க்கரை துளசியில் உள்ள  மூலக்கூறுகள்.  நிறைய ஆராய்ச்சிகளின் படி சர்க்கரை துளசியில் உள்ள 13 வகை மூலக்கூறுகள்  புற்று  நோய்க்கு நல்ல மருந்தாக இருக்கிறது,  சர்க்கரை நோயினால்  கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் பரவும் வேகத்தை சர்க்கரை நோய் அதிகமாக்கும்போது உடலில் முதலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது வட்ட வடிவமான புண்களாக மாறிவிடும். இந்த காயங்களை ஆற்றும் சக்தி இனிப்பு துளசிக்கு உள்ளது என்றும் கண்டறிந்து இருக்கிறார்கள். குறைக்க வல்லதாக இருக்கிறது என்றும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.   .

எவ்வளவு சாப்பிடலாம்?

சர்க்கரை துளசியின் விழுது என்றால் கொட்டைப்பாக்கு அளவும். சாறு என்றால் 30 மிலி அளவும் காலை உணவுக்கு முன்பு இரவு உணவுக்கு முன்பு என்று சாப்பிட்டு வரும்போது, படிப்படியாக சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, பக்க விளைவுகளையும் குறைக்கும். கணையத்தை பலப்படுத்தும் அருமருந்து இனிப்பு துளசி. தகுந்த மருத்துவர் ஆலோசனையோடு மட்டுமே இதை மருந்தாக பயன்படுத்த வேண்டும்

Click to comment

Copyright © 2021