General Health & Wellness

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் அற்புத மூலிகை எலும்பு ஒட்டி தாவரம்!

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் அற்புத மூலிகை எலும்பு ஒட்டி தாவரம்!

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் அற்புத மூலிகை எலும்பு ஒட்டி தாவரம்!

எலும்பு ஒட்டி தாவரம் உடைந்த எழும்புகளை ஒட்டக்கூடிய அற்புத மூலிகை, எலும்புகளை பலமாக்கக் கூடியதும் கூட. வறண்ட பூமியில் வளரும் தாவரம் இது.இதில் காய்ச்சு எடுத்த எண்ணெய் வெளிப்புற வைத்தியத்துக்கு பயன்படுகிறது. எலும்பொட்டியின் மூலக்கூறுகளை உள்ளுக்குள் நேரடியாக செலுத்தும்போது உடைந்த எலும்புகளை ஒட்டி வைப்பதில் உடனடி நிவாரணம் கிடைக்கிறதா என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால்,நமது முன்னோர்கள் ஆயுர்வேதத்திலும், சித்தர்கள் தங்களது நூல்களிலும் எலும்பு ஒட்டியின் மூலம் உடைந்த எலும்புகள் வேகமாக ஒட்டிக்கொள்கின்றன என்று குறிப்பு எழுதி வைத்து இருக்கிறார்கள். உடைந்த எலும்புகளை சேர்க்க இத்ந சூரணத்தை மேற்புறமாக வைத்து கட்டு போட்டு மிக விரைவில் எலும்புகள் ஒட்டிகொள்வதாகவும் அந்த வைத்திய முறை சொல்கிறது.

உள்ளுக்கு சாப்பிடலாமா?

இதை உள்ளுக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் இலைகளை மட்டுமெடுத்து சாறு எடுத்து அருந்தலாம், அல்லது அரைத்த விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிடலாம். முதுகுத் தண்டு காயங்கள், முறிந்த எலும்புகள், கிழிந்து போன சவ்வுகள், சவ்வு விலகல், ஒன்று சேர்வதை உள்ளுக்கு சாப்பிடும் இந்த எலும்பொட்டி மருந்து செய்கிறது. நரம்,புகளின் பலஹீனங்களையும் இது சரி செய்கிறது. காலை, இரவு உணவுக்கு முன்பு இந்த எலும்பொட்டி விழுதையோ, அல்லது சாறையோ உள்ளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

6 மாத காலமா?

உடைந்த எலும்புகள் நவீன மருத்துவத்தில் சேர வேண்டுமென்றால் 6 மாத காலம் கூட ஆகிவிடுகிறது. மிக விரைவில் உடைந்த எலும்புகள் இயற்கைமுறையில் சேர்வதற்கு இந்த எலும்பொட்டி மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. உடைந்த எலும்புகள் நன்றாக சேர்ந்து விடுவதை பார்க்க முடியும். இப்போது வயதானவர்களை விட இளைய சமுதாயத்துக்குத்தான் மூட்டு வலி பாடாய் படுத்தி வருகிறது. இதற்கு காரணம், சத்துக்களை கிரகிக்க கூடிய சக்தி எலும்புகளுக்கு இல்லாமல் போவதுதான். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த எலும்பொட்டி வைத்தியம் நன்கு வேலை செய்கிறது. அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கை முறையில் வைத்தியத்துக்கு உதவுமிந்த எலும்பொட்டியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மருத்துவ குணம்

உடைந்த எலும்புகளின் வீரியத்தை அதிகரித்து சரியாகும் நேரத்தை குறைக்கும். எலும்பு முறிவுக்கு எலும்பொட்டி மிகச்சிறந்த மருந்து காய்ச்சி எடுக்கும் எண்ணெயைத் தடவும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு எலும்புகள் சேரும். அறுவை சிகிச்சை எலும்புகள் சேரும் நேரம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகிவிடும். எலும்பொட்டி உள்புறம் அல்லது வெளிப்புறம் பயன்படுத்தி வரும்போது எலும்புகள் விரைவில் நன்றாக சேர்ந்துவிடும்.

ஐந்து பொருட்கள் சேர்த்த களிம்பு

எலும்பு ஒட்டியுடன் சேர்த்து ஐந்து பொருட்களை காய்ச்சி எடுத்து களிப்பு போல செய்து தசை வலிக்கு கொடுக்கிறோம். தோள்பட்டை வலி போன்ற தசை வலிகளுக்கு இந்த களிம்பை பூசி வந்தால் வலி சரியாகும். குதி கால் வலிக்கு எலும்பு ஒட்டியை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தடவி வர குணமாகும்.

Click to comment

Copyright © 2021