Stomach Digestion Problem

உடல் எடையை குறைக்க இந்த காடியை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்க

ஜீரண மண்டல நோய்கள் வராமல் தடுக்க மற்றும் உடல் எடையை குறைக்க இந்த காடியை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்க

ஜீரண மண்டல நோய்கள் வராமல் தடுக்க மற்றும் உடல் எடையை குறைக்க இந்த காடியை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்க

Probiotics பானம் வீட்டில் தயாரிக்கும் முறை:-
உணவு செரிமானத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பெருக பெருக உடல் ஆரோக்கியம் மேம்படும். இத்தகைய நல்ல பாக்டீரியாக்கள் எண்ணிக்கை பெருக தினமும் ஒருவேளைக்காவது ஒரு டம்ளர் probitoics அடங்கிய பானம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

கிராமத்தில் நம் முன்னோர்கள், புளிச்ச தண்ணி அல்லது நீச்ச தண்ணி எனப்படும் சாதம் வடித்த நீரை புளிக்க வைத்து அதை தினமும் probiotics பானமாக சேர்த்து வந்தாரகள். ஆனால் இன்றைய குக்கர் சமையல் முறையில் அது தயாரிப்பது கடினம் என்பதால் , முந்தைய பதிவில் சொன்னதுபோல் பல்லாயிரக்கணக்கான நல்ல பாக்டீரியாக்களை உள்ளடக்கிய Beet Kvaas எனப்படும் probiotics பானம் எளிமையாக வீட்டிலே தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
2-3 பீட்ரூட்கள்
கண்ணாடி பாட்டில்
சுத்தமான காய்ச்சி (கொதிக்க வைத்து) ஆறவைத்த தண்ணீர்
ஒரு டீ ஸ்பூன் கல் உப்பு (அயோடின் சேர்க்காத கடல் உப்பு)
செய்முறை:-
பீட் ரூட்டை நன்றாக தோல் சீவியபின், சின்ன சின்ன சதுரங்களாக வெட்டி எடுத்து கண்ணாடி பாட்டிலின் கால்பகுதி நிரம்பும்வரை போடவும். அதோடு ஒரு டீஸ்பூன் கல் உப்பு(கடல் உப்பு) சேர்க்கவும். பின்பு பாட்டில் மேற்புறம் ஒரு இஞ்ச் அளவு மட்டும் காலி இடம் வைத்துவிட்டு மீதியை காய்ச்சி ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் கொண்டு நிரப்பவும் . நன்றாக குலுக்கிவிட்டு கண்ணாடி பாட்டிலை மூடி வைத்துவிடவும். ( நேரடியாக சூரிய வெளிச்சம் படாத அளவிற்கு room temperature யில் வைக்கவும். பிரிட்ஜில் அல்ல) . இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து பார்த்தால் மேற்புறத்தில் நீர்குமிழ்கள் உருவாகி இருப்பது காணலாம். இப்போது இந்த தண்ணீரை பருகலாம். மீதமுள்ளதை அப்படியே பாட்டிலோடு பிரிட்ஜில வைத்து தினமும் பருகி வரலாம்.
இந்த beet kvass பானம் பருகுவதன் மூலம் நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்கு சேருவதோடு அல்லாமல் போனஸாக இரும்பு சத்தும் கிடைக்கும். கல்லீரல் மற்றும் இரத்தமும் சுத்திகரிக்கப்பட்டுவிடும்.
பாலில் செய்யும் Kefir, yogurt விட, இது மிகவும் ஆரோக்கியமானது. எளிமையாக வீட்டில் அனைவரும் செய்துகொள்ளலாம்

Click to comment

Copyright © 2021