General Health & Wellness

உடம்பு இளைக்க..வடிவான உடல் அமைப்பைப் பெற குடம்புளி சமைத்து சாப்பிடுங்க…!

உடம்பு இளைக்க..வடிவான உடல் அமைப்பைப் பெற குடம்புளி சமைத்து சாப்பிடுங்க….!

உடம்பு இளைக்க..வடிவான உடல் அமைப்பைப் பெற குடம்புளி சமைத்து சாப்பிடுங்க….!

200 வருடங்களுக்கு முன்பு எல்லாம் பாரம்பரியமாக நமது உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்களில் குடம்புளி புளி முக்கிய இடத்தை பெற்று இருந்தது. நமது வீடுகளில் பாட்டி சமைக்கும்போது வழக்கமான மர புளியை உபயோகப்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக குடம் புளியைத்தான் உபயோகப்படுத்தி சமைத்து வந்தார்கள்.

குடம்புளி வத்த குழம்பு கொஞ்சமா தருவீர்களா?

எனக்கு விவரம் தெரிந்தும் கூட வத்த குழம்பு வைத்தால் குடம்புளியை பயன்படுத்தி எங்கள் பாட்டி வைக்கும் வத்த குழம்பை, சுற்றி உள்ளவர்கள் கேட்டு வாங்கிக்கொண்டு போவார்கள். காரணம் குடம்புளியில் வைத்த வத்த குழம்பின் சுவைக்காகத்தான். இது சுவைக்காக மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்துக்காக என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரிந்தது.இதனால்தான் பாட்டி அம்மா இருவருமே மெல்லிய உடல் வாகுடன் இருந்தார்கள்.

தேடலில் கிடைக்கும் குடம்புளி…

இன்றைக்கு உடல் எடை குறைப்பு என்று நெட்டில் சர்ச் செய்தால், முதலில் வந்து நிற்பது இந்த குடம்புளிதான். அதோடு உடல் எடை குறைப்பு மருந்தில் இந்த குடம்புளி மூலக்கூறுதான் இடம்பெற்று இருக்கிறது.

வயிற்று புண் இருந்தாலும் இந்த புளிப்பை சாப்பிடலாம்…

ஆயுர்வேத மருத்துவத்தில் மிகப் பழமையாக மருத்துவ முறையாக குடம்புளி இடம்பெற்று இருக்கிறது. தண்ணீரில் குடம்புளியை கரைத்து எடுத்த சாறு உணவாக, மருந்தாக பயன்படுத்தும் போது, வயிறு புண் சரியாகும். வயிறு புண் இருந்தால் புளிப்பாக சாப்பிடாதீர்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குடம்புளியில் தயாரித்த உணவுகளை புளிப்பாக சாப்பிட்டாலும் பிரச்சனை வராது.. மாறாக வயிற்று புண் சரியாகும். குடம்புளி லேகியம் வயிற்று புண்ணுக்கு மிகப்பெரிய மருந்து. வயிற்று புண், குடல் புண் என்று அவஸ்தைப்படுபவர்கள் இந்த லேகியத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து, ,காலை இரவு உணவுக்கு முன்பு வெந்நீர் அல்லது மோரில், 3 மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தேவையற்ற கழிவுகள் வெளியேறி வயிற்று புண் குணமாக உதவி செய்யும். வயிற்று பூச்சி, மூல நோய் என்று அவதிப்படுபவர்கள், இந்த லேகியத்தை சாப்பிட்டு வரலாம். இரவு , ஆசனவாய் குத்தல் அரிப்பு என்கிற பிரச்சனைகளை குணப்படுத்தும் அழகான மருந்து. குடம்புளி சாறு 20 மிலி எடுத்து காலை உணவுக்கு முன்பு என்று ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று கழிவு வெளியேறி வயிற்று பூச்சி தொந்திரவுகள் இருக்காது.

அட.. மூட்டுவலிக்குமா?

மூட்டு வலி, தசை வலி குறைக்கும் மருந்து இந்த குடம்புளி. சமீப கால ஆய்வுகள் படி,மூட்டுக்களில் எண்ணெய் தன்மை இல்லாத பிரச்சனையால் மூட்டுகள் இயங்க முடியாமல் இருக்கும். இதனால் வலி, வேதனை என்று அவதிப்படுவார்கள். இந்த பிரச்னையை குறைக்க குடம்புளி சாறு 30 மிலி அல்லது குடம்புளியை பதப்படுத்தி எடுக்கும் எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் தடவி ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி, வேதனை இருக்காது. குடம்புளியை .பதப்படுத்தி எடுக்கும் எண்ணெய் மாதவிலக்கு கால வலியைத் தீர்க்கும்..

உடல் எடையை குறைக்க குடம்புளியை சாப்பிடுங்க…

உடல் எடையை குறைக்க, தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைக்க இந்த குடம்புளி பெரும்பங்கு வகிக்கிறது. அது மட்டும் இல்லாமல், உடலை அழகாக மெயிட்டெயின் செய்வதிலும் குடம்புளிக்கு நிகர் குடம்புளிதான். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், உடலை வடிவாக மெயின்டெயின் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் தங்களது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவு பொருள் இந்த குடம்புளிதான். உடலின் கொழுப்பு விகிதத்தை சரி செய்யும் அருமையான உணவுப் பொருள் இந்த குடம்புளி.

கருமுட்டைப்பை பிரச்சனையால் கூடும் உடல் எடை…

கருமுட்டைப்பை பிரச்சனைகள், மாதவிலக்கு பிரச்சனைகள் இதனால் உடல் எடை கூடிவிடும். குடம்புளி சாறு 30 மிலி எடுத்து காலை உணவுக்கு முன்பு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு பாருங்கள்… எடை அதிகமாகும் பிரச்சனை தீர்ந்து போகும். நாளமில்லா சுரப்பிக்கு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் அனைத்தையும் மாற்றி உடல் எடையை சரி செய்யும். கருமுட்டை ப்பை நீர்க்கட்டி, மாதவிலக்கு இல்லை என்ற பிரச்னைக்கு மாத்திரை சாப்பிட்டு கஷ்டப்படுவதை விட . குடம்புளிசாறு எடுத்து மாரு ந்தாக அல்லது உணவாக சப்பிட ஆரம்பித்தால் பிரச்சனைகள் சரியாகும்.

குதிகால் வலிக்கு….

குதிகால் வலிக்கு மிகச்சிறந்த மருந்து இது. குடம்புளியை நெருப்பில் சுட்டால் கருப்பு நிறத்தில் திரவம் போன்று வரும். அதை இளம் சூடாக குதிகால் வலி இருக்கும் இடத்தில் பத்து போட்டு வாழை இலையை வைத்து கட்டிவிட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சூட்டில் வெந்நீர் விட்டு கழுவிவிட வேண்டும். இந்த சிகிச்சையினால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசை இழுப்பு தன்மை உண்டாகும்.இயற்கை முறையில் குதிகால் வலி சரியாகும்..

குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்…

இந்த குடம்புளி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை நீக்கும். குடம்புளியை அரை கப் தண்ணீரில் பிதுக்கி சாறை கலந்து கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Click to comment

Copyright © 2021