Ayurveda

இளமையைத் தக்க வைக்கும் .வாத கஷாயம்:!

நவீன ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை வாதத்தை முறையாக வைத்துக்கொண்டால், பக்க வாத நோய்கள், வலி, வயதான தோற்றத்தைத் தரும் விகிதங்களை குறைக்கும்.

நவீன ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை வாதத்தை முறையாக வைத்துக்கொண்டால், பக்க வாத நோய்கள், வலி, வயதான தோற்றத்தைத் தரும் விகிதங்களை குறைக்கும். அதோடு, புற்று நோய் வந்து இருந்தாலும் அதன் வீரியத்தை குறைக்கும் அருமருந்தான வாத கஷாயம் பற்றி பார்க்கலாம்.

வாத கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

கற்கடக ஸ்ருங்கி சூரணம் 2 கிராம், கடுகு ரோகிணி சூரணம் 2 கிராம், கண்டங்கத்திரி சூரணம் 2 கிராம், ஜடாமாஞ்சில் சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின்னர் வடிக்கட்டி காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

இளமையை பலப்படுத்தும்…

வாதத்தை குறைத்து, இளமையை பலப்படுத்தும் இந்த வாத கஷாயம். வாத கஷாயம் எல்லா வகை வலி, உடல் சோர்வு மூட்டு வீக்கம்,நரம்பு பலவீனம் அனைத்தையும் நீக்கும். வாதம், பித்தம், கபம் அளவு சரி சமமாக இருந்தாலும், உடலின் இயக்கத்துக்கு முக்கியம் வாதம். பக்க வாதம், மூட்டு வலி வரை வாதம் குறைந்தால்தான் இதுவும் குறையும். வாத கஷாயம் வயதாகும் வேகத்தையும் குறைக்கும்.

வாதம் கட்டுக்குல்க் இருந்தால் மனா நோய் இருக்காது…

மன நோய் பிரச்சனை, மன அழுத்தத்தால் உடலின் மாற்றம், பிறக்கும்போதே மூளை வளர்ச்சி குறைவு… இதன் பக்க விளைவாக மன நோய் என்று பல பிரச்சனைகள் இருக்கும். . வாதம் கட்டுக்குள் இருந்தால் மன நோய் இருக்காது. வாதத்தை கட்டுப்படுத்த வேண்டும். மன நோய்க்கு கொடுக்கப்படும் எல்லா மருந்துகளும் வாதத்துக்குக்கு கொடுக்கப்படும் மருந்து. மன நோயை குணப்படுத்தும், குறைக்கும் அழகான மருந்து.

வலிகள் இல்லாத வாழ்க்கைக்கு…

புற்று நோயை தடுக்க முடக்கு வாதம் வலிகள் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்றால் கட்டாயம் இந்த வாத கஷாயத்தை பருகலாம். வாத கஷாயம் குழந்தைகளுக்கு அருமருந்து.சில குழந்தைகள் மூட்டு வலி, கழுத்து வலி என்று அவதிப்படுவார்கள். இவர்களுக்கு கால் அமுக்கி விட்டால்தான் தூக்கம் வரும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த வாத கஷாயத்தை கொடுக்கலாம். உணவோடு உணவாக இந்த வாத கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் அழற்சி, பலவீனம், பக்க வாதம், புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

Click to comment

Copyright © 2021