Concoctions & Home Remedies

ஆண்மை குறைவுக்கு அற்புத மூலிகை வால்மிளகு!

வால்மிளகுடன் தேன் கலந்து…

வால்மிளகுடன் தேன் கலந்து…

விஷத்தன்மையை முறிக்கக் கூடியது வால்மிளகு. ஜீரணத்தை அதிகரித்து, கணையத்தின் செயல்பாடு, ஈரல் செயல்பாடு இரண்டையும் அதிகப்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தது வால்மிளகு. நுரையீரல் மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் மண்டலதால் உண்டாகும் ஹார்மோன்கள் செயல் குறைப்பாடுகளை நீக்கும் சக்தியும் வால்மிளகுக்கு இருக்கிறது. ஆண்மை குறைவுக்கு அற்புத மூலிகை.. 3 கிராம் வால்மிளகு சூரணம் எடுத்து அதில் தேன் கலந்து மருந்தாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்க்க கூடாது. இனப்பெருக்க மண்டலம், கருப்பை கோளாறுகள் சீராகும். ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாறுதலையும் பார்க்க முடியும்.

தொண்டைக்குள் ஏதோ சிக்கின மாதிரி இருக்குதா?

வால்மிளகு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு மிகச்சிறந்த மருந்து தொண்டைக்குள் ஏதோ சிக்கின மாதிரி இருக்கும். இருமி எடுத்தால் சளி மாதிரி வரும். சில சமயம் தொண்டைக்குளேயே இருக்கும், வெளியில் வராது. இருமி இருமி சிரமம் ஏற்படுவதை பார்க்க முடியும். கட்டியாக இருக்கும் சளியை குறைத்து நுரையீரலை பலப்படுத்தும்.

,மவுத் வாஷ் தயாரிப்பு நிறுவனம்…

தனியார் நிறுவனம் அதாவது மவுத் வாஷ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அண்மையில் வாய் துர்நாற்றம் குறித்து சர்வே எடுத்தது. அதில் பொது மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய பதவியில் இருப்பவர்கள் வாய் துர்நாற்றம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதாவது தங்களுக்கு இந்த வாய் துர்நாற்றம் மிகவும் நெருடலான விஷயமாக இருக்கிறது. யாரிடமும் பேசுவதற்கு கூட கஷ்டமாக இருக்கிறது என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வேதியியல் மவுத் வாஷை விடவும் வால்மிளகு சூரணம் அரு மருந்து. பல் துலக்கியவுடன் இதை ஈறு, பற்களில் தடவி சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது வாய் துர்நாற்றம் இல்லாமலே போய்விடும். பற்களில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் கூட சரியாகி விடும்.

குரலில் பிரச்சனையா?

அர்ச்சகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், மத குருமார்கள், பாடகர்கள் என்று பலருக்கும் குரலில் பிரச்சனை வந்துவிடும். அப்படி பிரச்சனை இருக்கையில், வால்மிளகு சூரணத்தை பாலில் கலந்தோ, வெந்நீரில் கலந்தோ, தேனில் கலந்தோ காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று சாப்பிட்டு வர பிரச்சனைகள் இருக்காது.

Click to comment

Copyright © 2021