General Health & Wellness

அதிக உதிரப்போக்கு…ரத்தசோகை என்று பெரும்பாடு படுகிறீர்களா?

பெரும்பாடு கஷாயம் சாப்பிடுங்க!

பெரும்பாடு கஷாயம் சாப்பிடுங்க!

காசநோய் வந்து இருமல், சளி, சிறுநீர், மோஷனில் ரத்தம் போவது என்கிற உதிரப்போக்கு, ரத்த சோகையை சரி செய்வது என்பதில் பெரும்பாடு கஷாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மூலத்தால் ஏற்படும் உதிரப்போக்கும் சரியாகிவிடும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது அல்லது நார்மலாக இருக்கும்போது உண்டாகும் அதீத உதிரப்போக்குக்கு பெரும்பாடு என்று பெயர். அந்த பெரும்பாட்டை குறைக்கும் அருமருந்தாக இந்த பெரும்பாடு கஷாயம் இருக்கிறது.

கட்டிக்கட்டியான உதிரப்போக்கு…

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் தருவாயில் அதாவது மெனோபாஸ் கால பிரீ மெனோபாஸ் காலத்தில் கட்டி கட்டியான அதிகமான உதிரப்போக்கு பெண்களை ஆட்டிப்படைத்துவிடும். இதற்கு அருமருந்தாக இருக்கும் பெரும்பாடு கஷாயம். உடலுடைய பலஹீனத்தை சரி செய்து மீண்டும் ரத்த உற்பத்தியைத் தூண்டும் அருமருந்து இந்த பெரும்பாடு கஷாயம். இதை செய்யும் வழி முறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பெரும்பாடு கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

சுக்கு சூரணம் 2 கிராம், ஏலக்காய் சூரணம் 2 கிராம், திப்பிலி சூரணம் 2 கிராம், நிலப்பணம் கிழங்கு சூரணம் 2 கிராம், மூங்கிலரிசி சூரணம் 2 கிராம், நெருஞ்சில் சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட பொருட்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன் எடுத்து, வடிக்கட்டி காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

மாதவிலக்கு இல்லாத நேரத்திலும்…

மாதவிலக்கு காலத்தில் உதிரப்போக்கு ஒரு வகை, மாதவிலக்கு இல்லாத நேரங்களில் அதிகமாக உதிரப்போக்கு ஒருவகை என்று இரண்டு வகை பெரும்பாடு இருக்கிறது. இதையும் தவிர இனப்பெருக்க மண்டல நோயில் மிகவும் மோசமானது என்று சொல்லக்கூடிய வெள்ளைப்படுதல். இந்த வெள்ளைப்படுதல் நீராக வெளியில் கொட்டிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே சொல்லலலாம்.இடுப்பு வலி இருக்கிறது. மிகவும் கடுமையாக வலிக்கிறது,வேலை எதுவும் செய்ய முடியவில்லை. ஸ்கேன் செய்ததில் முதுகுத்த தண்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் டாக்டர் என்று வருவார்கள்.

வெள்ளைப்படுகிறதா?

அவர்களிடம் வெள்ளைப் படுகிறதா எனறால் ஆமாம் டாகடர் கடந்த 13 வருஷமா வெள்ளையப்படுதல் இருக்கிறது என்று சொல்லுவார்கள். வெள்ளையப்படுதலால் எலும்பு அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலி வந்து இருக்கும். இது நாளடைவில் காச நோயாக மாறுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது. பெண்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு அதிகமாகத் தேவைப்படுகிறது.

கருப்பையை எடுக்காதீர்கள்…

அதே போல் அதிக உதிரப்போக்கு, மாதவிலக்கு இல்லாத காலங்களிலும் அதிக உதிரப்போக்கு என்று மருத்துவரிடம் காண்பித்து தீர்வு கிடைக்காமல் 33 வயது 40 வயதில் கருப்பையை மருத்துவரின் ஆலோசனை பேரில் எடுத்து விடும் பெண்களும் இருக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் தீர்வாக இந்த பெரும்பாடு கஷாயம் இருக்கிறது. மூல நோய்முற்றி ரத்தம் வரும் நேரத்தில்தான் மருத்துவரிடம் காண்பிப்பார்கள். நவீன மருத்துவத்தில் இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்து விடுவார்கள். மூல நோயினால் ரத்தப்போக்கு இருந்தாலும் அதற்கும் ஒரு அருமருந்தாக இருக்கிறது இந்த பெரும்பாடு கஷாயம்.

Click to comment

Copyright © 2021