TAMIL

அடடே..80 வகை வாத நோய்க்கும் அருமருந்து!

தமிழ்நாட்டு மூலிகை தழுதாழை!

தமிழ்நாட்டு மூலிகை தழுதாழை!

தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்க கூடிய மிக அற்புதமான மூலிகை தழுதாழை. கொஞ்சம் தள்ளி போனால் கர்நாடகாவிலும் வறண்ட பூமியில் இந்த மூலிகை கிடைக்கும். சித்தா யுனானி, ஆயுர்வேத மருத்துவத்தில் தழுததாழைக்கு முக்கிய இடம்  உள்ளது. தழுதாழை குறித்த மருத்துவ ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்த வண்ணம் இருக்கிறது.நுரையீரல் தொடர்பான நோய்கள்,   மார்பகப் புற்று, கருப்பை புற்று நோய், கருப்பை வாய் புற்று இவற்றுக்கான மூலக்கூறுகளை தழுதாழையில்  கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க…

தழுதாழையின் சாறு 50 மிலி எடுத்து 5 மிலி தேன் கலந்து காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று உள்ளுக்கு பயன்படுத்தி வரலாம். இதனாலும் நிணநீர் சுரப்பி, நாளமில்லா சுரப்பி செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். சாறு பிடிக்காதவர்கள் தழுதாழையை அரைத்து விழுதாக எடுத்து கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வரலாம்.

அடடே..80 வகை வாத நோய்க்கும் அருமருந்து!

தலைவலி, பக்கவாதம் என்று ஆயுர்வேதத்தில் 80 வகை வாத நோய்க்கும் இந்த தழுதாழை மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முடக்கு வாதம், சரவாங்கி போன்ற மூட்டுக்களை பாதிக்க கூடிய  நோய்களுக்கு சிறந்த வலி நிவாரணியாக தழுதாழை இருக்கிறது மூட்டு வலிக்கு ஊசி போட்டு இருப்பர்கள். 3 மாதம் அல்லது 5 மாதம் வரை வலி இல்லாமல் இருக்கும். அடுத்து மூட்டு வலி பாடாய் படுத்தி வைக்கும். இதற்கு அருமருந்து, சிறந்த வலி நிவாரணி தழுதாழை. தழுதாழையை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சிய எண்ணெயை வெளிப்புறமாகத் தடவி வந்தாலும் மூட்டு வலிக்கு, முடக்கு வாதத்துக்கு நிவாரணம் கிடைக்கும்.  முதுகுத் தண்டு சவ்வு விலகல், முதுகுத் தண்டு உடைந்து போன பிரச்சனைகள் ., கணுக்கால் வலி,, குதிகால் வலி இவற்றுக்கு  தழுதாழை நல்ல மருந்து, நல்ல தீர்வாக இருக்கும்.

குழந்தையின்மை பிரச்சனை…

குழந்தை நிற்கவில்லை என்று வருத்தத்தோடு வருவார்கள். பெண்களின் உடலில் இருக்கும் வாதத்தை சரி செய்தால் மட்டும்தான் குழந்தை தங்கும். அசைவ உணவைத் தவிர்த்துவிட்டு தழுதாழை சாறு 30 மிலி எடுத்து பெண் நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றிலும். ஆண்  விளக்கெண்ணெய் கலந்து வெறும் வயிற்றிலும் சாப்பிட்டு வரும்போது குழந்தைக்கு பிளான் செய்தல் குழந்தை தங்கும்.மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை எடுத்துக்கொள்வது முற்றிலும் தவறு..

Click to comment

Copyright © 2021