TAMIL

அடடே…இதோ பாருங்க…மூட்டு வலி போக்கும் மின்ட் துளசி!

மின்ட் துளசியை உணவாக ஏன் சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள்.

மின்ட் துளசியை உணவாக ஏன் சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள்.

மின்ட் துளசியின்  நல்ல பயன் என்ன என்று தெரியாது. உலகின் அனைத்து கலாச்சாரத்திலும் மின்ட் துளசியைப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.இதை உட்புறம் எடுத்துக்கொண்டால்  நுரையீரல் பிரச்சனை, வயிறு பிரச்சனைகள் தீரும்.வெளிப்புறம் உபயோகப்படுத்தினால் மூட்டு வலி சரியாகும். தலைக்கு தேய்த்தால் பொடுகு போகும்.உச்சி முதல் பாதம் வரை நோய் குறைக்க மின்ட் துளசி பயன்படுத்தலாம்.

இஸ்லாமியர்கள்…ஆங்கிலேயர்களோடு நாட்டுக்குள் நுழைந்த மின்ட் துளசி!

மென்தால் வேதிப்பொருள் மின்ட் துளசி  தாவரத்தில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. மின்ட் துளசியை உணவுக்கு மருந்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து இருக்கும் மூலிகை.இந்த மின்ட் துளசி. இஸ்லாமியர்கள் ஆங்கிலேயர்கள் எப்போது இந்த நாட்டுக்குள் வந்தார்களோ அப்போது இது உள்ளே வந்தது.

வயிற்றுவலிக்கு உடனடி நிவாரணம்…

விழுதை உணவாக பயன்படுத்தலாம் சாறு 30 மிலி அளவுக்கு காலை இரவு உணவுக்குப் பின்னர் எடுக்கணும். அரைத்து எடுக்கும்  விழுது கொட்டைப்பாக்கு அளவு எடுத்து விழுங்கினால்  அல்சர் குணமாகும். உடனே வயிற்று வலி குணமாகும்.  மின்ட் துளசியை பொறுத்தவரை உணவாக பயன்படுத்த   செரிக்க கஷ்டப்படும் அசைவ உணவுகள், அதிக காரம் சார்ந்த உணவுகள் சாப்பிடும்போது இதை சேர்ப்பார்கள்.  இது வயிற்றினுள் உண்டாகும்   அமிலத்தன்மையை குறைத்து வயிறு எரிச்சல், வாயு பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும்.  

ஹைப்பர் அசிடிட்டி…

ஹைப்பர் அசிடிட்டி என்று சொல்வார்கள். தொண்டையில் இருந்து வயிறு வரை எரியும் இது இருக்கும்போது. பாண்டாசிட் மருந்துகள் எடுக்கும்போது எரிச்சல் குறையும். எடுக்காமல் விட்டால் கூடும். பாண்டஸிட் சிறுநீரகத்துக்கு பாதிப்பு,உண்டாக்கும் மருந்து. இதை எவ்வாறு குறைப்பது என்று பார்த்தால் மின்ட் துளசியின் சாறு 100 மிலி அளவுக்கு வெறும்  வயிற்றில் குடித்து பார்த்தால் எரிச்சல் இருக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யூரினரி டிராக் இன்பெக்ஷன் இருக்கும். அதற்கு 30 மிலி அளவுக்கு மின்ட் துளசி சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர  சிறுநீர் மண்டல  அழற்சி பிரச்சனை குறையும்.

உடலில் காரத்தன்மை அதிகரித்து நோய் அண்டாமல் இருக்க…

அல்கலைன் டயட் இன்றைக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டது,வயிற்றில் உண்டாகும்  புளித்ததன்மை, அமிலத்தன்மை உடலின் நோய்க்கு காரணம் காரத்தன்மை எனும் ஆல்கலைன் இருக்கும் இடத்தில் புற்று நோய் கூட வராது. இந்த  காரத்தன்மையை உடலுக்கு கொண்டு வருவதற்கு மின்ட் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. தீர்க்க முடியாது என்று சொல்லும் நோய்களும் தீரும். மூட்டுவலி நிவாரண மாத்திரை உணவாக சாப்பிடும் வழக்கம் இருந்தாலும்,  மூட்டு வலி இல்லாத சூழல் இல்லை என்பார்கள். இயற்கை முறையில் , மூட்டுக்களை ஆரோக்கியமாக வைக்க உடலில் காரத்தன்மை மெயின்டெயின் பண்ணுவது முக்கியம். அதற்கு மின்ட் துளசி சாப்பிட வேண்டும். விழுது அல்லது சாறு  தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால்  அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரித்து ஆரோக்கியம் கிடைக்கும்.தினசரி உணவாக சாப்பிட வேண்டியது மின்ட் துளசி.  

Click to comment

Copyright © 2021