TAMIL

விட்டமின் கீரை தவசிக்கீரையைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஊட்டச்சத்து மாத்திரை, ஊட்டச்சத்து கீரை

ஊட்டச்சத்து மாத்திரை, ஊட்டச்சத்து கீரை.

ஊட்டச்சத்து  டானிக் சாப்பிடுகிறேன் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்து குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது  தவசிக் கீரை. கோயம்புத்தூர், ஈரோடு போன்ற ஊர்களில் புதர்ச்செடி தாவரமாக அதிகம் வளர்ந்து கிடக்கும் இந்த தவசிக்கீரை. தவசிக்கீரைக்கு விட்டமின் கீரை என்கிற பெயரும் உண்டு.தவசி என்றால் நிறைவடைந்தது என்று பொருள். உடலுக்குத் தேவையான அத்தனை விட்டமின் சத்துக்களையும் நிறைவடையும் வகையில் தன்னுள்ளே கொண்டு இருப்பதால், இதற்கு தவசிக்கீரை என்று பெயர்.

ஏழைகளின் ஊட்டச்சத்து உணவு!

தவசிக்கீரையை  சாறாகவும், அரைத்த விழுது எடுத்து ஒரு நெல்லிக்காய் அளவுக்கு விழுதாகவும் உள்ளுக்கு சாப்பிடலாம். ஏழைகளின் ஊட்டச்சத்து மிக்க உணவு என்று தவசிக்கீரையை சொல்லலாம். இந்த கீரையை  உணவாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுத்து, உடலை உரமாக்கக் கூடிய கீரை இது.10 பேரை நகரத்தில் இருந்தும், 10 பேரை பழங்குடி மக்கள் இருக்கும் கிராமத்தில் இருந்தும் அழைத்து ஆய்வுக்கு உட்படுத்தியபோது, கிராமத்து ஆட்களிடம் ஊட்டச்சத்து அதிகமாகவும் நிறைவாகவும் இருப்பது ஆய்வறைகையில் தெரிய வந்துள்ளது.  குறைபாடுகள் என்று விட்டமின் சத்து, மெக்னீஷியம் சத்து, கால்சியம் சத்துக்குக்களுக்கு என்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தபோதும் கூட இல்லாத பயன்கள் இந்த தவசிக்கீரையை உணவாக சாப்பிட்டதன்  மூலம் கிடைத்து வருகிறது.

தவசிக்கீரையை உணவாக சாப்பிட்டு வாருங்கள்!

ஊட்டச்சத்து குறைபாடால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிப்படைத்து இருக்கும்போது தவசிக்கீரையை உணவாக கொடுக்கலாம். சரியான மூட்டு வலி என்று அவதிப்படுவார்கள். மூட்டு வலிக்கு மதகுதிரை சாப்பிட்டு வந்தபோதும் கூட எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். சாப்பிடும் சத்து மாத்திரைகள் உடலில் சேர்கிறதா என்கிற விவாதம் இன்னமும் நடந்து வருகிறது. உலகத்தில் வேறு வேறு மனிதர்கள் வைத்து உலக சுகாதார மையம் 1989 ம் ஆண்டு ஆய்வு நடத்தியது. அதில் தமிழ் நாட்டு மக்களிடம் மட்டும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது. காரணம் தவசிக்கீரையை உணவாக தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் சாப்பிட்டு வந்ததுதான் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. தவசிக்கீரையை மருந்தாக சாப்பிடுவதை விட  உணவாக சாப்பிடும்போது நல்ல பயன்களை பெற முடியும்.

பெண்களுக்கான பிரச்சனைகளுக்குத் தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய் கால கோளாறுகள், வெள்ளைப்படுதலை கூட இந்த தவசிக்கீரை சீர் செய்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு தவசிக்கீரை மிகப்பெரிய வரப்பிரசாதம். சத்து மதகுதிரைகள் சாப்பிட்டும் அது உடலில் சேராமல் இருக்கும். உடல் மெலிந்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தவசிக்கீரையை வரம் இருமுறை என்று தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும். இழந்த முகப்பொலிவை மீண்டும் பெறலாம்.

Click to comment

Copyright © 2021