TAMIL

வலிப்பு நோய் முதல் கருகரு தலைமுடி வரை இந்த ஒரு மூலிகையை போதும்!

குழந்தைகளுக்கு அறிவுசார்ந்த வளர்ச்சி கொடுக்கும் ஜடாமஞ்சள் மூலிகை!

குழந்தைகளுக்கு அறிவுசார்ந்த வளர்ச்சி கொடுக்கும்  ஜடாமஞ்சள் மூலிகை!

மன ஆரோக்கியம் மேம்பட…

புல்  வகை தாவரத்தின் வேர்ப்பகுதி வசம்பு எப்படி இருக்கிறதோ, அதே போன்றவகை தாவரத்தின் வேர்தான் ஜடா மஞ்சளும். புல்  வகைத்  தாவரத்தின் வேர்.பாகிஸ்தானில் இருந்து இந்தியா அதிகமாக வாங்கும் ஒரு மூலிகை என்றால் அது ஜடா மஞ்சள்தான். ஜடா மஞ்சள் சூரணத்தை பெரியவர்கள் என்றால் ஒரு தேக்கரண்டியும், சிறியவர்கள் என்றால் அரைத் தேக்கரண்டியும் எடுத்து தேனில் குழைத்து காலை இரவு உணவுக்கு முன்பு என்று சாப்பிட உடலின் ஆரோக்கியம், மனதின் ஆரோக்கியம் மேம்படும்.  

படபடப்பு…கோபம்…

மனம் சார்ந்த பிரச்சனை, குழந்தைகளுக்கு  அறிவுசார்ந்த வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்றால், இந்த ஜடா மஞ்சளை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். முதலில் மனா அழுத்தம். பயம் என்று ஆரம்பித்து நாளடைவில் அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும். படபடப்பு, கோபம், மன அழுத்தம் மனச்சிதைவு என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வைத்தியம் செய்வார்கள். இந்த வைத்தியத்துக்கு போதை மருந்துக்கு அடிமையாவது போல நோயாளிகளும் மருந்துக்கு அடிமையாகி விடுவார்கள். ஆனால், எல்லாவகை நோய்களுக்கும் ஜடா மஞ்சள் பொடியை தேன் அல்லது நெய்யில் குழைத்து காலை இரவு உணவுக்கு முன்பு கொடுத்து வந்தால்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நாளடைவில் சரியாகிவிடும்.

சிறந்த தன்னம்பிக்கைக்கு…

தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்களுக்கு ஜடா மஞ்சள் அருமருந்து என்று சொல்லலாம். குழந்தைகள் நன்றாக படித்து இருப்பார்கள். ஆனால், பரீட்சை என்று வரும்போது பயத்தில் எழுதாமல் வந்துவிடுவார்கள். அதே போல நல்ல  வேலையில் இருப்பவர்கள் ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்யும்போது சரியான ஆலோசனையைத் தர முயன்றும் சொன்னால் என்ன நினைப்பார்களோ  என்கிற தயக்கத்தில் பேசாமல் இருந்து விடுவார்கள், இதனால் அவர்களின் பிரமோஷன் கூட கிடைக்காமல் போய்விடும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஜடா மஞ்சளை தினமும் காலை இரவு உணவுக்கு முன்பு நெய்  அல்லது தேனில் குழைத்து சப்ப்பிட்டு வந்தால் தன்னம்பிக்கை கூடும்.

ஆட்டிசம் குறைபாடுகளுக்கு…

கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், மெனோபாஸ் கட்டத்தில் இருப்பவர்கள் தூங்கி ஐந்து வருடங்கள் ஆச்சு, ஏழு வருடங்கள் ஆச்சு என்பார்கள்,. இவர்கள் ஜடா மஞ்சளை பாலில் போட்டு கொதிக்க வைத்து பணம் கற்கண்டு சேர்த்து தொடர்ந்து பருக, நல்ல தூக்கம் வரும். ஆட்டிசம் குறைபாடுகளுக்கும் ஜடா மஞ்சள் சிறந்த மருந்து.

Click to comment

Copyright © 2021