Joint & Spinal Pain

முதுகுதண்டு வலிகளின் நிலைகள் என்ன ? வலிகளை அறுவைசிகிச்சை இல்லாமல் குணமாக்குவது எப்படி ?

கழுத்திலிருந்து இடுப்பு வரை சவ்வு விலகல் வலியா?

கழுத்திலிருந்து இடுப்பு வரை சவ்வு விலகல் வலியா?

கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஒவ்வொரு எலும்புகளுக்கு இடையேயும் மெல்லிதாக சவ்வு இருக்கும்.

எலும்புகள் நன்றாக வளைந்து கொடுக்க இந்த சவ்வுதான் காரணம். இதை  ஆங்கிலக்கத்தில் டிஸ்க் என்று சொல்வார்கள். கழுத்தில்  இருந்து இடுப்பு வரை எங்கு வேண்டுமானாலும் சவ்வு விலகல் ஏற்படும்.  இடுப்பு பகுதியில் இருக்கும் எலும்பை  லம்பார் என்று சொல்வார்கள். சவ்வு விலகல் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் உடற்பயிற்சியின்மை காரணமாக இருக்கும்.  முதுகுத் தண்டில்   சுற்றி இருக்கும் தசை. அழுத்தம் அல்லது இறுக்கம் என்று பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு 27 வயதில் இருந்து 90 வயது வரை என்று இருக்கிறது.  

சிறப்பு சிகிச்சைத் திட்டங்கள்…

சவ்வு விலகல் உடல் ரீதியாக, வாழ்வியல் முறை காரணமாக, விபத்தின் காரணமாக ஏற்படுகின்றது. இதற்கு ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைத் திட்டங்கள் இருக்கின்றன. கழுத்தில் ஏற்படும் சவ்வு விலகல், இடுப்பு முதுகுத் தண்டு சம்பந்தப்பட்ட எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் இதை  ஐந்து வகை சிறப்பு சிகிச்சை முறையில் சரி செய்கிறோம். முதலாவது  உடற்பயிற்சி. முதலில் சொல்ல  கூடியது பிஸியோதெரபி நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால்,  ஸ்ரீவர்மா ஸ்பெஷலைஸ்டு யோகா முறையை நாங்கள் சொல்லித் தருகிறோம்.  எடுத்த உடனே  அட்வான்ஸ் யோகாவுக்கு செல்வதில்லை.  உங்களுக்கு ஏற்றாற்போல யோகா சொல்லிக்கொடுத்து பிராக்டிஸ் செய்யச் சொல்கிறோம். நிச்சயம்  மாற்றம் ஏற்படும். இரண்டாவது உணவுக்கட்டுப்பாடுகள்… முதுகுத் தண்டு பலவீனம்… நிறைய பெண்கள் குழந்தை பிறந்த பிறகு பாலூட்ட ஆரம்பிக்கும்போது எடுக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வது கிடையாது. கல்லூரி பெண்களை வைத்து இருக்கும்  தாய்மார்கள் காலை உணவை ஸ்கிப் செய்து விடுகிறார்கள். இந்த பலவீனம்  கழுத்து,. இடுப்பு சம்பந்தப்பட்ட நோயாக மாறிவிடுகிறது. உணவில் எதை சேர்க்கலாம்,  எதை தவிர்க்கலாம்,  எதை அளவாக சேர்க்க வேண்டும். மாவுச்சத்து கிழங்கு வகைகள் தவிர்க்க வேண்டும் என்று சொல்லித் தருகிறோம்.  

ஆயுர்வேத மருந்துகள்…

மூன்றாவது ஆயுர்வேத மருந்துகள், சித்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏன் சவ்வு தண்டில் அழுத்தம் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து சிலருக்கு மாத்திரை, சிலருக்கு  கஷாயம், சிலருக்கு  லேகியம், சிலருக்கு உள்ளுக்கு மருந்து தேவையில்லை,  வெளியில் பூசும் எண்ணெய் மட்டும் போதும் என்று முடிவு செய்து அதற்கேற்ற ட்ரீட்மெண்ட் தருகிறோம்.  நான்காவது ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை… முதுகுத்  தண்டு சம்பந்தப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை உலக அளவில் பிரசித்தி. கடிவஸ்தி அடிமுதுகுத்  தண்டில் அழுத்தம் இருக்கும் இடங்களில் கோதுமை மாவு அல்லது  உளுந்து மாவு எடுத்து பிரிட்ஜ் மாதிரி செய்து எண்ணெய் ஊற்றி வைப்பது போல் சிகிச்சை. கழுத்து முதல் இடுப்பு வரை பிழிச்சல் சிகிச்சை. லேபம் எனப்படும் மருந்தூட்டப்பட்ட தழை, மூலிகை அரைத்து சூடாக்கி வலி இருக்கும் இடங்களில் பூசி குளிக்க வைப்பது  இலைக்கிழி, பொடிக்கிழி  என்ரறு ஒரு வாரம் முதல் 6 வாரம் வரை இந்த ட்ரீட்மெண்ட் கொடுப்பது. ஐந்தாவது  ரசாயன சிகிச்சை. இரண்டு வாரத்தில் இருந்து 6 வாரத்துக்குள் வலி நீங்கிவிடும். கஷ்டமான மூவ்மென்ட்ஸ் மாறி வரும். ட்ரீட்மெண்ட் கம்ப்ளீஷன் என்று ரசாயன  சிகிச்சை தருகிறோம். பலவீனத்தை நீக்கி உடலை ஆரோக்கியப்படுத்தி மீண்டும் இந்த நோய் உடலில் தாக்காமல் இருக்க இந்த சிகிச்சை. 

Click to comment

Copyright © 2021