TAMIL

தேனும் சாறுமாக குழந்தைகளின் சளி நிவாரணி கற்பூரவல்லி மூலிகை!

குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடு இரவில் கூட ஆஸ்பத்திரிக்கு ஓடுவதை நாம் பார்க்கிறோம்.

குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடு இரவில் கூட ஆஸ்பத்திரிக்கு ஓடுவதை நாம் பார்க்கிறோம்.

உடலில் பிரச்சனையே வராமல் தடுப்பதற்கான மூலிகை நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த கற்பூர வல்லி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது இந்த கற்பூர வல்லி.  இதை மருந்தாக சாப்பிட வேண்டுமானால், 30 மில்லி சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்..இந்த சாறு குழந்தைகளுக்கான சளி, இருமல் காய்ச்சல், பெரியவர்களுக்கான அலர்ஜி, தும்மல், ஆஸ்துமா, வறட்டு இருமல் என்று எல்லாவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி மருந்து!

நுரையீரல்  பாதிப்புக்களுக்கு மிகச்சிறந்த அருமருந்து கற்பூர வல்லி சாறு. மருந்து சாப்பிட்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரத்துக்கு ஒரு முறை ஆன்ட்டி பயாடிக் சாப்பிட்டு வருவார்கள், நாளடைவில் அதற்கும் பயன் இல்லாமல் போய்விடும். அப்படியானவர்கள் இந்த கற்பூர வல்லி இலைச்சாற்றை தினம் 5 மில்லி அளவு காலையில் வெறும்வயிற்றில் சப்பிட்டு வந்தால், மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி மருந்தாக இது இருக்கும்.

தினமும் பஃப் எடுக்க கஷ்டமாக இருக்கும்தானே…

கொடிய நுரையீரல் ஆஸ்துமா நோயினால் தினமும் பஃப் எடுத்துக்கொள்ளும் சூழலில் இருப்பவர்களுக்கும் கூட தினமும் காலை இரவு உணவுக்கு முன்பு 30 மிலி கற்பூர வல்லி இலைச்சாறு, சாறு உட்கொண்டு வந்தால்,  பஃப் இல்லாமல் சுவாசிக்க முடியும்,. நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா, அலர்ஜி வாயு உபாதைகள் உள்ளவர்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்.கற்பூரவல்லி எதிர்ப்பு சக்தி தரக்கூடிய அருமருந்தாக இருக்கிறது.  

Click to comment

Copyright © 2021