TAMIL

தலை வலி முதல் தீராத சொறி சிரங்கு வரை தீர்க்கும் அதிசய மூலிகை

ஒற்றைத் தலைவலியை போக்கும் தும்பை!

ஒற்றைத் தலைவலியை போக்கும் தும்பை!

ஒற்றைத் தலைவலி,  அலர்ஜிக் சைனசைட்டிஸ் போன்ற  பிரச்சனைகளுக்கு முக்கிய மருந்தாக இருக்கும்  தும்பை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

தும்பை செடிக்கு மட்டும் அல்ல, வேருக்கும்    மருத்துவ குணம் உண்டு.

காதில்…மூக்கில்….

தும்பையின் சாறு எடுத்து மருத்துவத்துக்கு காதில், மூக்கில் சொட்டுக்கள் விடுவது வழக்கமாக இருக்கிறது. மூக்கில் தும்பை சாறு விடும்போது சேர்ந்து இருக்கும் சளி வெளியில் வந்துவிடும். காதில் சொட்டுக்கள் விடும்போது காது பிரச்சனைத் தீர்ந்துவிடும். உள்ளுக்குள் சாப்பிட  வேண்டும் என்றால் கொட்டைப்பாக்கு அளவு விழுது எடுத்து, அல்லது அரைத்து எடுத்த சாறு 30 மில்லி அளவு எடுத்து பயன்படுத்தலாம்,

தேள்கடிக்கு…

இன்றும் தேள்கடிக்கு தும்பையை அரைத்து வைத்து கட்டி விடுவது கிராமங்களில் பழங்குடி மக்களிடையே இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது. இதை பாம்பு கடிக்கும் கூட செய்வார்கள்.  தும்பையை உள்ளுக்கு சாப்பிடும்போது ஆஸ்துமா பிரச்சனைகள், சைனஸைட்டீஸ் பிரச்சனைகள் குணமாகி விடும். அட்டிக்கேரியா என்று சொல்லக்கூடிய ஒருவித அலர்ஜி நோய் முற்றிலும் குணமாகி விடும்.

தோல் அரிப்பு…

தோல் அரிப்பு ஏற்பட்டு அங்கங்கு சிவந்து படை போல வருவதை அட்டிகேரியா என்று சொல்கிறோம். மூக்கு சம்பம்ந்தப்பட்ட தொந்திரவு சைனஸைட்டீஸ் அடுக்கு தும்மல், மூக்கில் நீர் வடிந்து கர்சீப் நனையக்கூடிய அளவுக்கு தண்ணீர் வருவது, தண்ணீர் வடிவதை  நிறுத்தினால் தலை வலி, தலை  கணம். பழச்சாறு அருந்தினால் ஒவ்வாமை, ஐஸ் வாட்டர் குடித்தால் தலைவலி இது போன்ற பிரச்சனைகளுக்கு 100 நாட்கள் தொடர்ந்து தும்பை சாறோ  அல்லது கொட்டைப்பாக்கு அளவு விழுதோ எடுத்து சாப்பிட்டு வந்தால், 20 வருடம் இந்த பிரச்சனையில் அவதிப்பட்டவர்களுக்கு கூட பிரச்சனை சரியாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Click to comment

Copyright © 2021