TAMIL

சர்க்கரை நோய் பக்கவிளைவா? இதோ இருக்கு இன்சுலின் செடி!

இன்சுலின் செடி,சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மிக அருமையான தாவரம்.

இன்சுலின் செடி,சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மிக அருமையான  தாவரம்.  

இந்தோனேஷியா பல்கலைக்கழக  ஆராய்ச்சியில் இன்சுலின் செடியில்  இருக்கும் நான்கு மூலக்கூறுகள் கணையத்துக்கு  பெரும் அளவில் உதவி செய்வதாக கண்டறிந்துள்ளார்கள். இலை ஒன்று எடுத்து சாப்பிட்டாலே சர்க்கரை நோயில் நல்ல மாற்றம்  என்கிற ஆரம்ப கட்ட ஆராய்ச்சி வந்து இருக்கிறது. விலங்குகளுக்கு இந்த நான்கு மூலக்கூறுகளை கொடுக்கும்போது நல்ல மாற்றம்  இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.  

ஒரே ஒரு இன்சுலின் இலையை சாப்பிடுங்களேன்….

ஒரு இன்சுலின் இலையை எடுத்து   தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து காலை 30 மிலி இரவு 30 மிலி சாப்பிடுங்கள். அல்லது ஒரு இலையை அம்மியில் மைய  அரைத்து விழுதாக காலை இரவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். சர்க்கரை அளவு குறைந்து ஆரோக்கியத்தில்  முன்னேற்றம் காணலாம்.சர்க்கரை நோயினால் ஏற்படும் சோர்வு, பலவீனம், பக்க விளைவை இன்சுலின் இலை கட்டுப்படுத்தும். இன்சுலின் தாவரத்தை பற்றிய  ஆய்வுகளில்  சீன மருத்துவ பல்கலையில் 17 வகை மூலக்கூறுய்களை எடுத்து எந்தெந்த பொருட்கள் எந்தெந்த நோயை குணப்படுத்துகிறது என்று பார்த்தார்கள். சர்க்கரைக்கு மருந்து எடுக்கும்போது எந்த அளவுக்கு கட்டுக்குள் இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இந்த மூலக்கூறுகளை பயன்படுத்தினாலும் கட்டுக்குள் இருந்தது.சர்க்கரை நோயை மட்டும் இல்லாமல் பக்க விளைவையும் கட்டுப்படுத்த உதவியது.

சர்க்கரை நோயின் பக்கவிளைவுகளுக்கு  டாடா!

 நார்வே மருத்துவ பல்கலை 100 பேர் கொண்ட  நபர்களை இரண்டு குழுக்களில் அமைத்தார்கள். ஒரு குழுவுக்கு  இன்சுலின் மூலக்கூறு மாத்திரை, இன்னொரு குழுவுக்கு  சர்க்கரை நோய்க்கு கொடுக்கப்படும் மெடிசன் கொடுத்தார்கள். இரண்டு குரூப் சார்ந்தவர்களையும்   6 மாசம் கழித்து  ஆய்வு செய்து பார்த்ததில் இன்சுலின் மூலக்கூறு மாத்திரை  சாப்பிட்ட குழுவினருக்கு கணையம் இன்சுலின் சுரப்பதில் மாற்றம், சர்க்கரை அளவு சமன் அடைந்தது., வழக்கமாக சர்க்கரை நோயினால் உண்டாகும் கால் எரிச்சல், மரத்துப்போகும் தன்மை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள்.  சர்க்கரைக்கு எப்போதும் போல மருந்து சாப்பிட்டு வந்த குரூப் சார்ந்தவர்களுக்கு சர்க்கரை அளவில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. ஆயுவுக்கு உட்படுத்தப்பட்ட 6 மாதத்தில் கண் எரிச்சல், கால் எரிச்சல் உடல் சோர்வு இருந்ததாக கண்டறிந்துள்ளார்கள். இதுவே இப்போது பெரிய ஆய்வாக நடந்துக்கொண்டு இருக்கிறது.

Click to comment

Copyright © 2021