TAMIL

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

அடடா…ஒரு நாளைக்கு 200 தும்மலாவது போடுகிறீர்களா?

அடடா…ஒரு நாளைக்கு 200 தும்மலாவது போடுகிறீர்களா?

தும்மல் கஷாயம்:

காலையில் எழுந்தவுடன் நிறைய பேர் அடுக்குத் தும்மலாக தும்ம ஆரம்பிப்பார்கள். மூக்கில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். ஊதுவத்தி வாசனை, வாசனை திரவியம் என்று முகர்ந்தால்  மீண்டும் தும்மல் ஸ்டார்ட் ஆகிவிடும். குறைந்தது  200 தும்மல் போடக்கூடியவர்களை கூட பார்த்து இருப்போம். ஒவ்வாமை என்று ஊசி போட்டும் நிற்கவில்லை, ஹோம் ரெமடி ஏதாவது சொல்லுங்கள் என்பார்கள். அவர்களுக்கான  தும்மல் கஷாயம்  பற்றி இப்போது பார்க்கலாம்.

தும்மல் கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

பட்டை சூரணம் 2 கிராம்,  ஏலரிசி சூரணம்  2 கிராம்,  திப்பிலி சூரணம் 2 கிராம், கருப்பட்டி தேவையான அளவு.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, 100 மிலி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி, கருப்பட்டி சேர்த்து காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

காலையில் எழும்போதே ஒவ்வாமை….

காலையில் எழும்போதே ஒவ்வாமை என்று தும்ம ஆரம்பிப்பார்கள். மருந்தை சாப்பிட்ட பிறகுதான் அன்றைய நாளை ஆரம்பிப்பார்கள். சரி ஒரு மாத்திரையோடு முடிந்ததா  என்றால் இருக்காது. நாள் ஆக ஆக ஒவ்வாமை மாத்திரையின் எண்ணிக்கை ஒன்று, இரண்டு மூன்று என்று கூடிக்கொண்டே போகும். தும்மல் முதல் நுரையீரல் மண்டல ஆஸ்துமா வரை இந்த தும்மல் கஷாயம் கட்டுக்குள் வைக்கும். ஒவ்வாமை முதல்  அலர்ஜிக் சைனஸைட்டீஸ்  தும்மல் அதிகமாகி சிறுநீர் கூட கசிந்துவிடும். இதனால் கோயிலுக்கு பொது இடங்களுக்கு கூட போவதில்லை என்று சொல்வார்கள். இதை  வேகமாக குறைக்கும் அருமருந்து தும்மல் கஷாயம்.

மாத்திரையை விட வேகமாக…

ஒவ்வாமை  மாத்திரை சாப்பிட்டால் மட்டும்தான் தும்மல் குறையும் என்று நினைக்கிறோம். மாத்திரையை விட  வேகமாக வேலை செய்யும் இந்த தும்மல் கஷாயம். குழந்தைகள் உட்பட   வறட்டு இருமல் என்று கஷ்டப்படுவார்கள். உள்ளே இருக்கும் சோறு வாந்தியாக வந்து, பிறகு கோழை வந்த பிறகுதான்  நிம்மதியான தூக்கம் வரும். குழந்தைகளுக்கு இப்படி இருக்கும்போது பெற்றோர்களுக்கு இதுவே பெரும் பிரச்சனையாக இருக்கும்.  ஒவ்வாமையால்  வயதானவர்களுக்கு படுத்து இருந்தால் தும்மல்வரும்.  உட்கார்ந்து இருந்தால் தும்மல் வராது.  நிறைய பேர் உட்கார்ந்து தூங்குவார்கள். இதற்கு இன்றைக்கு முதலுதவி சிகிச்சை என்றால் அது தும்மல் கஷாயம்தான்.

உடல் சத்துக்களை உறிஞ்ச…

பித்தப்பை கற்கள், தும்மல் பிரச்சனை, விலா  வலி, மார்புக்கூடு நடுவே வலி,ஜீரணமின்மை, செரிமானமின்மை, வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு சத்துக்களை உறிஞ்ச முடியாமல் இருக்கும் பிரச்சனை என்பது முதல் சளி, தும்மல் பிரச்சனை வரையான பிரச்னைக்கு தும்மல் கஷாயம் சிறந்த மருந்தாக இருக்கிறது. கஷாயமாக குடிக்கவில்லை என்றால், மருந்தாக உருட்டி சாப்பிடலாம்.

Click to comment

Copyright © 2021