TAMIL

கண் பார்வைக் கோளாறு நீங்கி அற்புதமான பார்வைத் திறனை தரும் மருந்து!!

ரத்தத்தில் தேங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றும் வாகை மரம்!

ரத்தத்தில் தேங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றும் வாகை மரம்!

வாகை மரத்துக்கு சமஸ்கிருதத்தில் ஸ்ரீஷம் என்று பெயர்.

வாகை மரத்தின் விசேஷம் என்று சொன்னால், உடலில் ரத்தத்தில் இருக்கும் நச்சு பொருட்களின் வீரியத்தை குறைப்பதுதான். அப்படி ரத்தத்தில் நச்சு பொருட்களின் வீரியம் குறையும்போது தோல் நோய்கள் விரைவில் குணமாகும். வாகை மரப்பட்டையை அரைத்து எடுத்த விழுது கொட்டைப்பாக்கு அளவு மருந்தாக பயன்படுத்தலாம். அல்லது சாறு 50 மிலி எடுத்து மருந்தாக உள்ளுக்கு சாப்பிடலாம். அல்லது  வாகை மரப்பட்டை சூரணம் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து. 300 மிலியாக வற்றியவுடன் காலை இரவு என்று தேன் கலந்து குடிக்கலாம்.  

பாம்பு கடிக்கும் வாகை….

வாகை மரப்பட்டையை பதப்படுத்தி எடுக்கும் எண்ணெயை மேல்பூச்சுக்கு பயன்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் பாம்பு கடிக்கு கூட வாகை மரத்தில் இருந்து எடுக்கும் ஒருவித மூலக்கூறுதான் மருந்தாக பயன்பாட்டில் இருக்கிறது.  

பஞ்சாங்க அகாதமி!

சித்தா, ஆயுர்வேதத்தில் பாம்புக்கடி போன்ற  ரத்தத்தில் கலந்து இருக்கும் விஷத்தன்மையை எடுக்க பஞ்சாங்க அகாதமி என்கிற முதலுதவி சிகிச்சையை அளிக்கிறோம்.  பஞ்சாங்கம் என்றால் ஐந்து அகாதமி என்றால் சிகிச்சை. இந்த வகை சிகிச்சையில் உடலில் எந்தவகை விஷம் தேங்கி இருந்தாலும் வெளியேறிவிடும்.

ரத்தத்தில் காப்பர்…

உதாரணத்துக்கு ரத்தத்தில் காப்பர்,அலுமினியம் அதிகமாகிப் போனால் 80 வயதில் உண்டாகும் ஞாபக மறதி நோய் 30 வயதில் உண்டாகி விடும். இந்த நச்சுக்களை வெளியேற்ற பஞ்சாங்க அகாதமி  பயன்படும்.  அதே போன்று ஈரல் செயல் இழப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு. தைராய்டு சுரப்பி செயல் இழந்து போதல், சோரியாசிஸ் எக்சிமா பிரச்சனைகளில்  உடலை சுத்தப்படுத்துதல் அவசியம். உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் விஷத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க வாகை மரப்பட்டை 20 கிராம் எடுத்து  ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 300 மிலியாக குறைத்து  வடிகட்டி காலை மதியம் இரவு மூன்று வேளை  உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் விஷத்தன்மை குறைந்து உடல் உறுப்பு பாதிப்புகளில் மாற்றம் ஏற்படும்.

Click to comment

Copyright © 2021