TAMIL

ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணி புழுவெட்டு கஷாயம்!

கோடைக்காலம் வந்தாலே தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருக்கும்.

கோடைக்காலம் வந்தாலே தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருக்கும்.

கண்களில் ஒளியற்ற தன்மை, கண்களில் சோர்வு, தலையில் ஏற்படும் புழுவெட்டு இதற்கான புழுவெட்டு கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.

புழுவெட்டு கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:

மஞ்சள் சூரணம் 2 கிராம், வேப்பிலை சூரணம் 2 கிராம்,  புடலைக்கொடி சூரணம் 2 கிராம்.

செய்முறை:

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் 100 மிலியாக தண்ணீர் வற்றியதும் இறக்கி வடிக்கட்டி காலை, இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.

அய்யோடா…காலையில் எழும்போதே ஒற்றைத் தலைவலி….

வெளிப்புற பூச்சுக்கு இதை பயன்படுத்தினால் புழுவெட்டு, தலைவலி சரியாகும்.ஒற்றைத் தலைவலிக்கு மிகச்சிறந்த மருந்து, காலையில் எழும்போதே தலைவலி ஆரம்பிக்கும். இரண்டாவது மன அழுத்தம் அதிகமாகும்போது ஒற்றைத் தலைவலி ஆரம்பிக்கும். மூன்றாவது செரிமான மண்டல கோளாறுகள் உண்டாகும்போது  ஒற்றைத் தலைவலி ஆரம்பிக்கும். எல்லாவிதமான ஒற்றைத் தலைவலியாக இருந்தாலும் அதை குணப்படுத்தும் இந்த கஷாயம்.

தலையில் புழுவெட்டு பிரச்சனை….

புழுவெட்டு பிரச்சனை எல்லா வயதினருக்கும் ஏற்படும். வட்ட வட்டமாக முடி  கொட்டி வரும். கண் புருவங்களில் கூட மீசையில் கூட புழுவெட்டு இருக்கும். இந்த பொருட்களை தேங்காய் எண்ணெய் குழைத்து இதை புழுவெட்டு இருக்கும் இடங்களில் தடவி குளித்து விட வேண்டும். கண்களில் சோர்வு இருக்கும். கண்கள் எப்போதும் பலவீனமாக சோர்வாக இருக்கும் சூழல் அதற்கும் மிகப்பெரிய அளவில் உதவி செய்யும் இந்த கஷாயம்.செரிமான மண்டலத்தில் மேலடுக்கு செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்… அதோடு  இந்த கஷாயம். பித்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் நீக்கும்.

அடடா…உடல் சோர்வு!

நிறைய பேருக்கு உடல் சோர்வு இருக்கும். சத்து மாத்திரை சைவம், அசைவம், கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டாலும் கூட உடல் சோர்வு பிரச்சனையாக இருக்கிறது. சாப்பாட்டு ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க முடியாத அளவுக்கு நிலை. இருக்கும்.அதற்கு உதவி செய்யும் இந்த புழுவெட்டு கஷாயம்.குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனை உணவின் சத்துக்களை வயிற்றில் இருக்கும் பூச்சிகள் சாப்பிட்டு விடுவதுதான். உடல் தேறவில்லை, சளி காய்ச்சல் இருமல் என்று சொல்லுவார்கள். . அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு  இந்த கஷாயத்தை  காலை இரவு உணவுக்கு முன்பு கொடுத்தால் புழுக்கள் வெளியேறி ஆரோக்கியம் கிடைக்கும்.

Click to comment

Copyright © 2021