General Health & Wellness

உலகிலேயே சிறந்த மலமிளக்கியை தெரியுமா ?

அந்த காலத்தில் குளிர் ஜுரம் வந்தால் இதைத்தான் கொடுத்தார்கள்!

அந்த காலத்தில் குளிர் ஜுரம் வந்தால் இதைத்தான் கொடுத்தார்கள்!

சரக சமிதை என்கிற புத்தகம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம்.

இதில் பற்படகம்  புல்  பற்றிய குறிப்பு இருக்கிறது. காய்ச்சல் வந்தால் அவசரமாக ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கம் இன்று நம்மிடையே இருக்கிறது. அந்த காலத்தில் குளிர் காய்ச்சல் வந்தால், பற்படக புல்லைத்தான் மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மலேரியாவையும் குணப்படுத்தும்!

மலேரியா காய்ச்சலை கூட குணப்படுத்தும் மருந்தாக பற்படக புல்  மூலிகை இருந்திருக்கிறது. கால் கரண்டி பற்படக புல்  சூரணத்தை எடுத்து 300 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டி காலை இரவு உணவுக்கு முன் என்று பருகி வந்தால், காய்ச்சல் குறைந்து வயிறு உபாதைகள் நீங்கி, ஜீரணமின்மை, பசியின்மை குறைந்து உடல் நன்றாக இருக்கும்.  

சிக்கன் குனியா  காயச்சலுக்குப் பின் கூட…

காய்ச்சலுக்குப் பின்னர் பக்க விளைவு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். உதாரணத்துக்கு சிக்கன் குனியா வந்ததற்கு  பிறகு மூட்டு வலி, உடல் வலி, அசதி சோர்வு என்று பாடாய் படுத்தி எடுக்கும். அதற்கும் இந்த பற்படக புல்  சூரணம் அரு மருந்து. தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பக்க விளைவுகள்  ஓடிப்போய்விடும். சிக்கன் குனியா, டெங்கு மலேரியா காய்ச்சலுக்கு நில வேம்பு கஷாயம் குடிக்க வேண்டுமென்று நிலவேம்புவின் பின் ஓடுகிறோம். நில வேம்புவை விட சிறந்த மருந்து பற்படகப் புல்.சரக சமிதை புத்தகத்தில் எந்தவகையான காய்ச்சல் என்றாலும் பற்படக புல், மற்றும் கோரைக்கிழங்கைத்தான் மருந்தாக பயன்படுத்தி இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. எந்த காய்ச்சலாக இருந்தாலும் வைரஸ், ஃப்ளூ , மலேரியா, டெங்கு, டைபாய்டு என்று எதுவாக இருக்கட்டும். பற்படாக புல் சூரணம் சாப்பிட்டால் காய்ச்சல் மாறுதல் அடையும். இரிட்டபுள் பவல் சின்றோம் பிரச்சனை இருந்தால் பற்படக புல்  48 நாட்கள் மருந்தாக சாப்பிட்டு வர  குணமாகி விடும்.

Click to comment

Copyright © 2021