TAMIL

உபயோகப்படுத்தும் சோப்பில் கார்போக அரிசி உள்ளது!

செடியில் இருந்து கிடைக்க கூடிய விதைகளையே கார்போக அரிசி என்று சொல்கிறோம்.

செடியில் இருந்து கிடைக்க கூடிய விதைகளையே கார்போக அரிசி  என்று சொல்கிறோம்.

இது ஒரு சூடான மருந்து.கார்போக அரிசியை ஆயுர்வேத மருத்துவத்தில் பால், பசும் கோமியம் இவற்றில்  எதாவது ஒன்றில்  21 முறை சுத்தி செய்து பின்னரே சூரணமாக செய்து பயன்படுத்துவார்கள். இந்த சூரணத்தை தேன் கலந்து குழைத்தால் ஒரு களிம்பு மாதிரி வந்துவிடும்,இதை ஒரு தேக்கரண்டி அளவு காலை, இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாறுதலை காண முடியும். சர்க்கரை நோயாளிகள் பால் அல்லது வெந்நீரில் சாப்பிடலாம். இதை புளித்த மோரில் கலந்து வெண்புள்ளிகள், வெண்குஷ்டத்துக்கு வெளிப்பூச்சு மருந்தாக  பூசி வந்தால் வெண்குஷ்டம் நாளடைவில் மறைந்து போகும்.

 சோரியாசிஸ் வந்த சுவடு கூடத் தெரியாது….

கார்போக அரிசியை முறையாக சுத்தி செய்த பின்னர்தான் மருத்துவ உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்.  சோரியாசிஸ் என்று சொல்லக்கூடிய ஒரு சவாலான நோயை குணப்படுத்தும் அற்புத மூலிகை இந்த கார்போக அரிசி. வகை வகையான சோரியாசிஸ் வியாதிகள் உள்ளன. தலையில் வரக்கூடிய பொடுகு, பாதங்களில் மட்டுமே வரக்கூடிய சோரியாசிஸ், நகங்களில் மட்டுமே வரக்கூடிய சோரியாசிஸ், உடல் முழுவதும் வரக்கூடிய சோரியாசிஸ் என்று பல வகை உள்ளன.  இது போன்ற சோரியாசிஸ் நோய்களை குணப்படுத்தி, மீண்டும் வராதபடி செய்யும் குணம் இந்த கார்போக அரிசிக்கு உள்ளது. வந்த சுவடு கூட தெரியாமல் வடுக்களும் மறைந்து போகும். சோரியாசிஸ் என்பது ஆயுர்வேதத்தில் இரண்டு  வித பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஒன்று உடல் இரண்டாவது மனம். சோரியாசிஸ் நோய் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலும் வருகிறது என்று அதற்கும் சேர்த்து மருந்து கொடுப்பதே ஆயுர்வேத மருத்துவம்.

உபயோகப்படுத்தும் சோப்பில் கார்போக அரிசி உள்ளது…

சோரியாசிஸ் நோய்க்கு மருந்து என்று தரப்படும் எந்தவிதமான இயற்கை மருந்துகளிலும் இந்த கார்போக அரிசி கட்டாயம் இடம்பெற்று இருக்கும். வெளிப்புற உபயோகத்துக்கு தரப்படும் சோப்பு போன்றவற்றில் கூட  இந்த கார்போக அரிசியின் பங்கு இருக்கும்.  பெண்களுக்கு வெண்குஷ்டம் அல்லது வெண புள்ளிகள் என்று வந்துவிட்டால் குடும்பமே மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில், இந்த கார்போக அரிசி மருந்து மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. உள்ளுக்கும், வெளிப்பூச்சுக்கும் கார்போக அரிசியினாலான மருந்தை உபயோகப்படுத்தும்போது. முழுவதுமாக குணம் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த கார்போக அரிசியை பயன்படுத்தக் கூடாது.

Click to comment

Copyright © 2021