Connect with us

TAMIL

TAMIL

பெண்களின் ஹார்மோன் பிரச்சனைக்குத் தீர்வு தரும் பால்பெருக்கி!

பால்பெருக்கி என்று சொல்லும்போதே தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகும் ஒரு அருமருந்து என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

பால்பெருக்கி  என்று சொல்லும்போதே தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகும் ஒரு அருமருந்து என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

பச்சை நிறத்தில் இலையும், கொஞ்சம் லேசான சிவப்பு நிறத்தில் இலையும் என்று தாவரம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.பெண்களின் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், மாதவிலக்கு கோளாறுகள் போன்ற  பிரச்சனைக்கும் பால் பெருக்கி மருந்தாக பயன்படுகிறது.

 ஆண்களுக்கு அவதி கொடுக்கும் வெட்டை!

அரைத்து எடுத்த சாறு தேங்காய் எண்ணெய் போல் வாசனையுடன் இருக்கும். இதை 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் முதல்தான் கொடுக்க ஆரம்பிக்கலாம். சாறு பிடிக்கவில்லை என்றால் அரைத்த விழுதை வாழைப்பழத்தில் பிசைந்தும் கொடுக்கலாம். பெண்களின் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள்,  ஆண்களுக்கு உண்டாகும் வெட்டை நோய் இதற்கு மிகச்சிறந்த மருந்து பால்பெருக்கி.

இயற்கை முறையில் தாய்ப்பால் பெருக…!

புதிதாக குழந்தை பெற்ற இளம் தாய்மார்களுக்கு இயற்கை முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தாவரம் பால்பெருக்கி.இன்று பல பெண்கள் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பக்க விளைவாக சர்க்கரை நோய், இதய நோய் பிரச்சனைகள் என்று அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு இயற்கை முறையில் ஹார்மோன் தெரபி செய்ய மிகச்சிறந்த மருந்து பால்பெருக்கி. 100 மிலி பால், 200 மிலி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பால்பெருக்கி போட்டு  சூரணத்தை கொதிக்க வைத்து நன்றாக சுண்டியவுடன் இறக்கி வடிக்கட்டி இந்த கஷாயத்தை பருகிவந்தால் இயற்கை ஹார்மோன் தெரபியோயாக இது இருக்கும். என்னதான் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை எடுத்துக்கொள்வது மிக மிக தவறு.

Newsletter Signup

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Health Remedy For Gout (Arthritis)

Joint & Spinal Pain

Change Your Lifestyle to Beat Diabetes

Diabetes

காலையில் எழுத உடனே தும்மல் வந்து கொண்டே இருக்கிறதா ? இதோ அதற்கு வீட்டிலிருந்தே தீர்வு

TAMIL

The Ayurvedic remedy for Gastric Problems

Gastric Problems

Newsletter Signup

Copyright © 2021

Connect
Newsletter Signup

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp